உங்கள் அழகிரி சேனல்

  • Home
  • உங்கள் அழகிரி சேனல்

உங்கள் அழகிரி சேனல் கள்ளக்குறிச்சி மாவட்டம்.

⚫⚫நடிகை செளகார் ஜானகி காலமானார். வயது 94.சௌகார் ஜானகி (Sowcar Janaki) என்பவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் ...
21/08/2026

⚫⚫நடிகை செளகார் ஜானகி காலமானார். வயது 94.

சௌகார் ஜானகி (Sowcar Janaki) என்பவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற திரையுலகின் பழம்பெரும் முன்னணி நடிகை ஆவார்.

ஏழு தசாப்தங்களுக்கும் (70 ஆண்டுகள்) மேலான நீண்ட கலைப்பயணத்தில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது (2022) பெற்றவர் ஆவார்.

21/08/2026

மணலூர்பேட்டை அருகே மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் திரௌபதி அம்மன் திருவிழா தேரோட்டத்துடன் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
-----------------------------------------------------------------
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டினம் கிராமத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த ஆடி மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த திருவிழா, இன்று ஆவணி நான்காம் தேதி 29- அடி உயரம் கொண்ட திருத்தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவையொட்டி திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேரோட்டத்தை காண சித்தப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். விழா முழுவதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழா, கிராம மக்களின் பாரம்பரியத்தையும் ஆன்மிக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் முக்கிய விழாவாக இந்த பகுதியில் கொண்டாடப்படுகிரது.

20/08/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - திருக்கோவிலூர் வழித்தடம்: படியில் தொங்கியபடி செல்லும் பள்ளி மாணவர்கள் - நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ!

18/08/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,
சு.கொளத்தூர் அருகே சரவணபுரத்தில் 81 அடி உயரமுள்ள மகா விஸ்வரூப ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் கோவிலில் இன்று ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தினத்தில், அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட யாதவ சமுதாய தலைமை ஒருங்கிணைப்பாளர் R.J.D.பாஸ்கர் B.E யாதவ் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி ப.பொன்னுசாமி யாதவ், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி சுரேஷ் யாதவ், சந்தைப்பேட்டை நீதித்துறை ஓய்வு சுகுமார் யாதவ், திருவதிகை கீர்த்தி யாதவ் சென்ட்ரல் பாங்க் துணை மேலாளர் ஓய்வு, தொழுவந்தாங்கல் கண்ணன் யாதவ், நிருபர் சா.சி.அ.அழகிரி யாதவ், இளைஞர் அணி நிர்வாகிகள் P.பாலாஜி B.E யாதவ், M.சதீஷ் B.E யாதவ், V.குகன் யாதவ், சிவராஜ் யாதவ் ஆகியோர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

18/08/2026

பரமநத்தத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் ஊரணி பொங்கல் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பரமநத்தம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் யாதவகுல சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட குடிதெய்வமான அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஊரணி பொங்கல் விழா இன்று ஆவணி 01, செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி 43 கிராமங்களைச் சேர்ந்த யாதவ சமுதாயத்தினர் திரளாக கலந்து கொண்டனர். மணிமுத்தா நதிக்கரையில் அம்மனுக்கு ஸ்ரீ சக்தி கிரகம் ஜோடித்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்து, அமுது படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ரத உற்சவம் மற்றும் அம்மன் ஊர் உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவில் அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர் மற்றும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட யாதவ சமுதாய தலைமை ஒருங்கிணைப்பாளர் R.J.D. பாஸ்கர் B.E. யாதவ் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி ப.பொன்னுசாமி யாதவ், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி சுரேஷ் யாதவ், சந்தைப்பேட்டை நீதித்துறை ஓய்வு சுகுமார் யாதவ், திருவதிகை கீர்த்தி யாதவ், சென்ட்ரல் பாங்க் துணை மேலாளர் ஓய்வு, தொழுவந்தாங்கல் கண்ணன் யாதவ், நிருபர் சா.சி.அ.அழகிரி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும், இளைஞர் அணி நிர்வாகிகள் P.பாலாஜி B.E. யாதவ், M.சதீஷ் B.E. யாதவ், V.குகன் யாதவ், சிவராஜ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் 43 கிராமங்களைச் சேர்ந்த யாதவ சமுதாய மக்கள் ஒன்று கூடி, தங்களது குலதெய்வமான ஸ்ரீ கெங்கை அம்மனை வழிபட்டு, பக்தி மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். விழா சிறப்பாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.

17/08/2026

கருணை கடலே கந்தா போற்றி 💐🌹🙏

16/08/2026
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருள்மிகு ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அகிலாண்ட கோட...
14/08/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருள்மிகு ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை முத்தாம்பிகை அம்மனுக்கு இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு வண்ண வண்ண வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட அன்னை முத்தாம்பிகை பக்தர்களுக்கு அருள் காட்சி தந்தார்.!💐🌹🙏

Address

Manam Poondi

605759

Website

Alerts

Be the first to know and let us send you an email when உங்கள் அழகிரி சேனல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share