AMD MUSEE

AMD MUSEE generally music helps to relax mind.

*வெட்டியான் மகளின் வரட்டியில்.**எரிய போகிறது**உயர் ஜாதி பிணம்.* *தீண்டாமை*ஈட்டிய பொன்னும்உனதில்லை-மடிஆட்டிய பெண்ணும்உனக்...
28/01/2025

*வெட்டியான் மகளின் வரட்டியில்.*
*எரிய போகிறது*
*உயர் ஜாதி பிணம்.*

*தீண்டாமை*

ஈட்டிய பொன்னும்
உனதில்லை-மடி
ஆட்டிய பெண்ணும்
உனக்கில்லை-கொடி
நாட்டிய மண்ணும்
இனியில்லை;
ஒன்றுமிலை உனதென்று
உணராத மானிடா!
வந்தது போகும் - நியதி;
வெந்தது போகும் அதுவே
இறுதி;
உலவும் காற்று
உலவும் வரையே
நீ மனிதன்.
பட்டம் பதவி புகழ் மாண்பு
உனக்கல்ல,
சிறுதுளி காற்றிற்கே.

-சாமானியன்

*குடியரசு அணிவகுப்பு!*குடியரசு நாளைப் பற்றியும் கொஞ்சம் பேச்சு வந்ததுவீட்டில்.குடியரசு எப்படி இருக்கும்?குபீரென கேட்டுவி...
26/01/2025

*குடியரசு அணிவகுப்பு!*

குடியரசு நாளைப் பற்றியும்
கொஞ்சம்
பேச்சு வந்தது
வீட்டில்.

குடியரசு எப்படி இருக்கும்?

குபீரென கேட்டுவிட்டாள் பேத்தி!

குடியரசுன்னா என்ன?
என்று கேட்டாலாவது
குத்துமதிப்பாக விளக்கி விடலாம்,

எப்படி இருக்கும் என்றால்?

எப்படிச் சொல்வேன் பதிலை!

விடை என்னுள் இல்லை,
வெளியே கட்டலாம் என்று
பேத்தியுடன் தெருவில் நடந்தேன்.

எங்கிருந்தோ
தமிழகத்தை நம்பி வந்து
கட்டுமான வேலைக்கு
கம்பி வளைக்கும்
தம்பியின் கையை
காட்டச் சொன்னேன்,
செதில் செதிலாய்
இறுகிக் காய்த்துக் கிடந்த
கைகளைப் பார்த்தவள்
ரசிக்கமுடியாமல்,

“ அச்சச்சோ”! என்றாள்.

வழக்கமாக
தேநீர் அருந்தும் கடையில்
நேந்திரங்காய் சிப்ஸ் பொறிக்கும்
பெரியவரின்
வியர்த்து வழியும்
வயிற்றைக் காட்டினேன்,
எரியெடுப்பு சூட்டை
நெருங்க பயந்தவள்,

“ தாத்தா பாவம்” என்றாள்.

மல்லி மிளகாய் அரைக்கும்
மிஷின் கடை பக்கம்
நின்று காட்டினேன்,

“தாங்க முடியல
வாங்க தாத்தா!”
என்றாள் எரிச்சலாக.

எப்படி இருக்கு குடியரசு?
என்று கேட்டேன் பேத்தியிடம்,

“பாக்கவே
பாவமா இருக்கு தாத்தா!”
என்றாள்.

நடந்து வந்த
எங்கள் பாதையோரம்
ஓரம் கட்டிய காரில் ஒரு நாய்
தாண்டிக் குதிக்க,

“ தாத்தா! தாத்தா!
இங்க பாருங்க
புசு..புசுன்னு அழகா
இந்த நாய் மட்டும்
ஜாலியா இருக்கு!”

இந்த முறை பேத்தி
எனக்கு காட்டினாள்.

குடியரசு
யாருக்கு ஜாலி?
யாருக்கு அவதி?

என்பதை
குத்துமதிப்பாக வேணும்
பார்த்து விட்டாள் பேத்தி!

-சாமானியன்

Ave Maria
13/01/2025

Ave Maria

*சீர்திருத்த சிந்தனையில்*குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மையை விதைத்தது நாம் தான்.அது எப்போது என்று சற்று திரும்பிப் பார்ப்...
10/01/2025

*சீர்திருத்த சிந்தனையில்*

குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மையை விதைத்தது நாம் தான்.

அது எப்போது என்று சற்று திரும்பிப் பார்ப்போம்
முதன்முதலில் பள்ளிக்கு அனுப்பும்போதே.

நீ தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோரும்,
வகுப்பில் நடத்தும் ஆசிரியரும், பள்ளி முதல்வரும், சமுதாயமும்
இப்படி மாறி மாறி பிஞ்சு மனதில் விஷ வேர்களை ஊன்றி விட்டால்
அந்த வேரில் விளைந்து வரும் கனியும் விஷத்தன்மை உடையதாகத் தானே இருக்க முடியும்!
சரி இதற்கு என்ன மாற்றுமுறை.

முயன்றதைப் படித்து தெளிவு கொண்டு முன்னேற்றம் கொள் என்று
பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைகளை போற்றி வளர்த்தால்
விளைவது கற்பக மரம் அருளும் அமுதமான கனியாகத் தானே வரும்.

பாடத்திட்டத்தில் ஒரு சில மாற்றம் தேவை
ஆமை மற்றும் முயல் கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அந்த கதையின் நீதி சரியானது என்றாலும் கூட அதில்
போட்டித் திறன் உள்ளது.

இதற்கான மாற்றுமுறை
கதையை வெற்றியோடு முடித்தவர்கள் அதனின் பின் விளைவை கவனிக்கவில்லை போலும்
இதோ உங்கள் சிந்தனைக்கு எமது கருத்து.

போட்டியில் வெற்றி பெற்ற ஆமை, முயலையும் தன் நண்பனாகவே கருதி,
மீண்டும் இரெண்டு பேரும் ஒன்றாகவே நடை பையின்று,
அப் பயணத்தில் குறுக்கே ஆறு வந்த போதும், ஆமை, முயலை தன் முதுகில் ஏற்றிச் சென்று மறு கரையை கடந்து இரெண்டுமே வெற்றி பெற்றதாக கதை இருந்திருந்தால்
குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

இப்படி அனைத்து பாடல்களும், கதைகளும் சிறு திருத்தம் பெற்றால்
பெரு மகிழ்ச்சி உலகில் பெருகி போட்டியில்லா பூலோகத்தை உருவாக்க முடியும் என்பதே எமது கருத்து

பாடத்திட்டம் மாறாவிட்டாலும் பரவாயில்லை,
வீட்டுப் பாடத்திட்டமாக மாற்றி அமைப்போம்
புது யுகத்தை உண்டாக்குவோம்

இப்படி இன்னும் நிறைய கதைகளுக்கும்,
பாடல்களுக்கும் திருத்தம் உண்டு,

தொடர்ந்து முயல்வோம்
ஆமையும், முயலும் போல ஒன்றாகவே பயணிப்போம்.

*சீர்திருத்த சிந்தனையில்*

27/12/2024
Amen
18/12/2024

Amen

Address

Gingee Main Road, Kanjanur
Villupuram
605203

Alerts

Be the first to know and let us send you an email when AMD MUSEE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category