Krsnaayur க்ருஷ்ணாயுர்

Krsnaayur க்ருஷ்ணாயுர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krsnaayur க்ருஷ்ணாயுர், Health Food Shop, madathuvilai kuzhichal, Arumanai.

08/12/2022

வயிறு புண்,தொண்டை புண் மற்றும் வாய்ப்புண் பிரச்சனைகள் சரியாக எளிய இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

👉 தேவையான மூலப்பொருட்கள்

1. ஏலக்காய் - 25
2. லவங்கப்பட்டை - 50 கிராம்
3. சிறுநாக பூ - 50 கிராம்
4. திப்பிலி - 50 கிராம்
5. லவங்கபத்திரி - 50 கிராம்
6. மிளகு - 25 கிராம்
7. நாட்டு சக்கரை - 250 கிராம்

👉 செய்முறை விளக்கம்

✍🏿 மேற்கூறிய அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

✍🏿 நாட்டு சர்க்கரை தவிர்த்து அனைத்தையும் சுத்தம் செய்து காய வைத்து கொள்ளுங்கள்

✍🏿 சுத்தம் செய்ததை தனித்தனியாக வறுத்து கொள்ளுங்கள்

✍🏿 வறுத்து கொண்டதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள்

✍🏿 பிறகு அரைத்த பொடியும்,நாட்டு சர்க்கரையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்

👉 தினமும் சாப்பிடும் முறை

1 ஸ்பூன் அளவு பொடியை எடுத்து 100மி சுடுநீரில் கலந்து உணவுக்கு முன் காலை மற்றும் இரவு உணவுக்கு முன் தொடர்ந்து 21 நாட்கள் குடிக்கவும்

👉 மருத்துவ நன்மைகள்

1.வயிற்று புண் சரியாகும்
2. வயிறு எரிச்சல் அஜீரணம் சரியாகும்
3. அல்சர் தடுக்கப்படும்
4. வாய்ப்புண், வாய் துர்நாற்றம் சரியாகும்
5. நா வறட்சி,உதடு வெடிப்பு ஆகியவை சரியாகும்

💞 க்ருஷ்ணாயுர் 💞

04/12/2021

சர்க்கரை நோய் என்றால் என்ன?

கணையம் தனது வேலையை குறைக்கும் பொழுது ஏற்படும் ஒரு முக்கிய குறைபாடு தான் இந்த சக்கரை நோய் என்பது இன்சுலின் அளவு சரியாக சுரக்காமல் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாக செரிக்காமல் ரத்தத்தில் தங்கி பாதிக்கப்படுவதே காரணம்,இது ஒரு வகையில் மரபு வழி குறைபாடும் கூட

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

கணையம் சரியாக வேலை செய்ய அதற்கான தூண்டுதலை கொடுக்க வேண்டும்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக ஆகாமல் எதிர்த்து போராடும் உணவுகளை சரியான புரத சத்தோடு கொடுக்கவேண்டும்

மருந்து மாத்திரைகள் தேவையா???

தயவு செய்து மருந்து மாத்திரை என உடலை பழக்க வேண்டாம் சர்க்கரை நோய்க்கு மருந்து என்பது இல்லை

சர்க்கரை அளவை எப்படி கட்டுக்குள் வைப்பது???

உங்களின் உடலுக்கு ஏற்ற உணவை மேற் கொள்ளுங்கள் தொந்தரவு இருப்பின் அதற்கான உணவை மட்டும் மேற்கொள்ளுங்கள்
சர்க்கரை நோய்க்கான எதிர்ப்பு உணவுகளை அதிகம் எடுங்கள் உடலை அதிகம் சுத்தம் செய்யுங்கள்

சர்க்கரை அளவு 500 வரை இருந்தாலும் அதை 150க்கு கீழ் கொண்டு வர மூலிகைகளை நாடுங்கள்

மூலிகைகளை பயன்படுத்துவதால்

●உடல் சோர்வு நீங்கும்
●கை கால் வலி மற்றும் பாத குடைச்சல் நீங்கும்
●சர்க்கரை அளவு 150க்கு கீழ் கட்டுக்குள் வரும்
●மூட்டு வலி தண்டுவலி நீங்கும்
●கண் பார்வை தெளிவு பெரும்
●நரம்பு தளர்ச்சி நீங்கும்
●உடல் சுறுசுறுப்பாக மாறும்
●மற்றும் சர்க்கரை நோய் உடலில் இருக்கும் தொந்தரவே உங்களுக்கு தெரியாது

மீண்டும் கூறுகிறோம்,சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு மட்டுமே இதற்கு மருந்து உணவுகள் தான் தவிர மாத்திரை மருந்துகள் அல்ல
உடலை உணவுக்கு அடிமையாக்குங்கள் மருந்துக்கு அல்ல

கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

1.அரிசி உணவை குறைத்து கொள்ளுங்கள்
2.அதிக கொழுப்பு உள்ள உணவு பண்டங்கள் கூடாது
3.தினசரி அதிக சுடுநீர் குடியுங்கள்
4.நடைப்பயிற்சி/உடற்பயிற்சி முக்கியமாக தேவை
5.கொழுப்பு உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஏதும் கூடாது

23/11/2021

செவ்வாழை ஏன் அடிக்கடி சாப்பிடவேண்டும் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

செவ்வாழையின் நன்மைகள்
செவ்வாழையின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1.சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும்:

பொட்டாசியம் சிறுநீரக கற்களைத் தடுப்பதில் அதிகம் பங்காற்றுகிறது. இது உடலில் கால்சியத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது, மேலும் எலும்பு வலிமைக்கு முக்கியமானது.

2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்

இந்த பழம் வைட்டமின் சி மற்றும் B6 இன் நல்ல ஆதாரமாகும். ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு இந்த ஊட்டச்சத்துக்களை நம்பியுள்ளது. வைட்டமின்கள் சி மற்றும் பி 6 க்கு, ஒரு சிறிய செவ்வாழை 9 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ஆர்டிஐ வழங்குகிறது. செவ்வாழையின் வைட்டமின் பி 6 இருப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதிகரிக்க உதவுகிறது.

3.சருமத்திற்கு நல்லது

செவ்வாழை உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, வெளிப்புறமாக பயன்படுத்தினாலும் உங்கள் சருமத்திற்கும் நல்லது. எளிய மற்றும் பயனுள்ள பேஸ்பாக் உருவாக்க, ஓட்ஸ், பிசைந்த செவ்வாழை மற்றும் ஒரு சில துளிகள் தேனைப் பயன்படுத்தி பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் முகத்தில் தடவவும், அது உலர சில நிமிடங்கள் காத்திருந்து, பின் கழுவி விடவும்.

4.இரத்தத்தை சுத்தம் செய்கிறது

பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன, இது இரத்தத்தின் தரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

5.எடை இழப்புக்கு உதவுகிறது

செவ்வாழையில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் சக்தியோடு வைத்திருக்கும். ஒரு முழு செவ்வாழையில் 90 முதல் 100 கலோரிகள் மட்டுமே உள்ளன மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது, இது அதிகப்படியான உணவு உண்ணுவதை தடுக்கவும் பசியை அடக்கவும் உதவுகிறது. இது உங்கள் எடையை குறைப்பதற்குஉதவும்.

6.ஆற்றல் அளவை அதிகரிக்கவும்

பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை சிவப்பு வாழைப்பழத்தில் காணப்படும் மூன்று வகையான இயற்கை சர்க்கரைகள். இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்களுக்கு விரைவான ஆற்றல் கிடைக்கும், அதன் பிறகு படிப்படியாக, தொடர்ச்சியான ஆற்றல் நாள் முழுவதும் கிடைக்கும். இதன் காரணமாகவே இது ஒரு சிறந்த காலை உணவாகும்.

7.இரத்த சோகையை தடுக்கிறது

இரத்த சோகை என்பது ஒரு ஆபத்தான கோளாறு ஆகும், இதில் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய போதுமான இரும்புச்சத்து இல்லை, இது இரத்த சிவப்பணுக்களின் கூறு ஆகும், இது நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. செவ்வாழையில் வைட்டமின் பி -6 அதிகமாக இருப்பதால், உடலுக்கு முதலில் ஹீமோகுளோபின் உருவாக்கத்தை அதிகப்படுத்தும், அவை இரத்த சோகையை போக்க உதவும்.

8.உங்கள் பார்வையை மேம்படுத்துகிறது

கண் பார்வை என்று வரும்போது, கண்கள் பலவீனமடையும் வரை சாதாரணமாக விட்டுவிடுகிறோம். செவ்வாழையை தினமும் உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், கண்கள் சரியாக செயல்பட உதவும்.

செவ்வாழையை அப்படியே சாப்பிடும்போது சுவையாக இருக்கும், சமைத்து உண்ணும் போது இன்னும் சுவையாக இருக்கும். நீங்கள் இதனை பெர்ரி, ஆப்பிள் அல்லது சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை மற்றும் தயிர் உடன் இணைத்தும் சாப்பிடலாம்.

22/11/2021

தூக்கமின்மை மற்றும் நன்றாக தூக்கம் வருவதற்கு சீரக தேன் நீர்

தேவையான பொருள்

1.தண்ணீர் - 100 மி.லி
2.சீரகம் - 10 கிராம்
3.தேன் - 1ஸ்பூன் அளவு

செய்முறை

✍️கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

✍️பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

✍️மேலும் இந்த நீருடன் சீரகமும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

✍️பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

✍️மேலும் நீருடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

✍️இந்த நீரை தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கவும்.

✍️இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.அடுத்து சரியாக நேரமாக தூங்கலாம் அடுத்த நாள் நல்ல சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கலாம்

இதனை பகலிலும் குடிக்கலாம்

21/11/2021

இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்

1.சுக்கு - 10 கிராம்
2.இலவங்கப் பட்டை - 10 கிராம்
3.கிராம்பு - 5 கிராம்
4.திப்பிலி - 5 கிராம்
5.மிளகு - 5 கிராம்
6.அமுக்கரா சூரணம் - 5 கிராம்
7.பனை வெல்லம் - தேவையான அளவு
8.தண்ணீர் - 100 மி.லி

செய்முறை

✍️ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️சுக்கு,லவங்கப்பட்டை,கிராம்பு,திப்பிலி மற்றும் மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

✍️பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக பொடியாக்கப்பட்டப் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.

✍️இவ்வாறு கிடைக்கபெற்ற நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️இதன் பிறகு தனியான பாத்திரத்தில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மேலும் இதனுடன் வடிகட்டிய நீரையும் சேர்த்துக்கொண்டு சுண்ட காய்ச்ச வேண்டும்.

✍️இவ்வாறு உருவான கசாயத்தை காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் இரத்த குழாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்

அனைத்து வயதினருக்கும் ஏற்றது 14 நாளில் பலன் கொடுக்கும்

17/11/2021

அடிக்கடி ஏற்படும் தீராத வாயு தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்

தேவையான மூலப்பொருள்

1.தண்ணீர் - 200 மி.லி
2.கருப்பு மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
3.சுக்கு பொடி - ஒரு தேக்கரண்டி
4.ஏலக்காய் பொடி- அரை தேக்கரண்டி

செய்முறை

✍️கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

✍️பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும்.

✍️மேலும் இந்த நீருடன் கருப்பு மிளகு,சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.

✍️இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை உணவிற்கு பின் குடிக்க வேண்டும்.

✍️இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக நீக்க முடியும்.

✍️மேலும் புதினா இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும்.

17/11/2021

உடல் எடை குறைக்கும் மூலிகை கலவை - தயாரிக்கும் முறை

மூல பொருட்கள்

குடம்புளி - 10
சீரகம் - 50கி
வெந்தயம் - 15கி
கருஞ்சீரகம் - 15கி
காய்ந்த இஞ்சி- 10
அஸ்வகந்தா - 25கி
கருமிளகு - 30கி
நாட்டு மல்லி - 20கி
ஆளி விதை - 25கி
ஏலக்காய் - 10
பட்டை - 50கி
ஓமம் - 30கி
லவங்க பூ- 10
நாகப்பூ - 5
அதிமதுரம் - 10கி
எலுமிச்சை தோல் - 15
நார்த்தங்காய் விதைகள்- 50
சப்போட்டா பழம் விதைகள்- 50

(மூல பொருட்களின் விலை 750 முதல் 900 வரை வரும் தரத்தை பொறுத்து மாறுபடும் முதல் தரம் நல்லது)

தயாரிக்கும் முறை :

மேற்கூறிய மூல பொருட்களை சேகரிக்கவும்

2 நாட்கள் நன்கு வெயிலில் காய வைத்து அரைத்து கொள்ளவும் .,

முடிந்த அளவு கசடுகளை நீக்கி நீக்கி நைய புடைய அரைக்கவும்...பிறகு நன்கு நிழலில் காய வைக்கவும்

முடிந்தவரை மூல பொருளாக வாங்கி அரைத்து கொள்ளுங்கள் கடைகளில் விற்கும் பவுடர்களை வாங்கி கலக்க கூடாது

*பயன்படுத்தும் முறை*

தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு 250ml கொதிக்க வைத்த தண்ணீரில் 1 spoon பவுடரை கலந்து எடுத்து கொள்ளலாம் அல்லது நன்கு கொதிக்க வைத்து சிறிது சுண்ட வைத்து குடிக்கலாம்
அதிக துவர்ப்பு இருந்தால் சுத்தமான தேன் கலந்து கொள்ளவும் (சர்க்கரை கூடாது)

எடுத்து கொள்ளும் பொழுது கட்டாயம் செய்ய கூடியவை

👉🏿 காலை எழுந்து முதல் இரவு தூங்க செல்லும் முன் வரை 250ml சரியாக 1 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் தண்ணீர் எடுத்து கொள்ளவேண்டும்
(குளிர்ந்த நீர் தவிர்க்கவும்)

👉🏿காலை மற்றும் இரவுக்கு உணவுக்கு முன் மலம் கழிக்க வேண்டும்

👉🏿முடிந்தால் 15நிமிடம் நடைபயிற்சி,சூரிய நமஸ்கராம் செய்யலாம்

👉🏿10-11 மணிக்குள் தூங்க சென்று விட வேண்டும்

👉🏿மதியம் மட்டும் தான் அரிசி உணவு எடுத்து கொள்ள வேண்டும்,இரவு அரிசி உணவு கூடவே கூடாது

👉🏿சாப்பிட்டவுடன் தூங்கவோ உட்கார்ந்து இருக்கவோ கூடாது ஒரு 10நிமிடம் நிற்கவும்

👉🏿சாப்பிட்ட பிறகு 5 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கவும்

👉🏿பிராய்லர் கோழி,பிராய்லர் முட்டை கூடாது

👉🏿எண்ணையில் பொரித்த எந்த ஒரு உணவையும் சாப்பிட கூடாது, வீட்டில் சமைத்தால் சிறிது மட்டும் சாப்பிடலாம்

👉🏿gas நிறைந்த குளிர்பானங்கள் எதுவாக இருந்தாலும் கூடாது

👉🏿வெள்ளை சர்க்கரை தவிர்த்து ,சிகப்பு சர்க்கரைக்கு மாறுங்கள்

நன்மைகள்

👉உடல் எடை 3 முதல் 5 கிலோ வரை குறையும்

👉தொடை சதை,கை சதை,முக சதை குறையும்

👉ஆண்களுக்கு தொப்பையும்,பெண்களுக்கு பின் புற சதையும் குறையும்

👉உடல் சோர்வு நீங்கும்

அதே போல தினமும் காலை மாலை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் இது ஊளை சதை உள்ளவர்களுக்கு பலன் கொடுக்க குறைந்தது 3 மாதங்கள் ஆகும்

Address

Madathuvilai Kuzhichal
Arumanai

Telephone

+917904972788

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krsnaayur க்ருஷ்ணாயுர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share