ஸ்ரீ ஆச்சி Online Store

ஸ்ரீ ஆச்சி Online Store இயற்கை உணவு மற்றும் தேன் .....

*எது தானம்? எது தர்மம்?*மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி ம...
01/11/2024

*எது தானம்? எது தர்மம்?*
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க,
பரம்பொருளே! இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.
சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தா

இரா.மகாமாயன் 9787270506 மூலிகைபெயர் :-திப்பிலி:- வாயுவை அகற்றும் சிறுநீர் பெருக்குதல் செரிமானம் மிகுத்தல் மாதவிலக்குத்தூ...
10/10/2024

இரா.மகாமாயன் 9787270506 மூலிகை
பெயர் :-
திப்பிலி:- வாயுவை அகற்றும் சிறுநீர் பெருக்குதல் செரிமானம் மிகுத்தல் மாதவிலக்குத்தூண்டுதல் ஆகிய மருத்துவ பண்புடையது
திப்பிலி சமூலம் மிளகு தோல் நீக்கிய சுக்கு சமனெடை வறுத்துப் பொடித்து அரைகிராம் தேனில் காலை மதியம் மாலை 3வேலையாக கொடுத்து வர வயிற்றுவலி வயிற்று பொருமல் நீர் கோவை தொண்டைக் கம்மல் வறட்டு இருமல் தலை பாரம் ஆகியவை குணமாகும்
1கிராம் திப்பிலிப் பொடியில் வெற்றிலைச்சாறு தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டுவர சளி நீன்டநாள் இருமல் காய்ச்சல் ஆகியவை தீரும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என...
23/08/2024

சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?

2. சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஆன்மீகம் என்னும் கடலை கடக்க நினைக்கும் அணைத்து மனிதர்களுக்கும் மனதில் கட்டாயம் இந்த கேள்விகள் எழுந்தே தீரும்.

கேள்வி 1:
சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?

யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல.... ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்.... குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.

கேள்வி 2:
சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்..... சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான ஆத்மாவாகதான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.

ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.

ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி வரலாம்...... விடை காயகல்ப்பம். காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.

பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் ......... பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்.

டைமன் கட்டிங்   ஒரிஜினல்         ஸ்படிங்கமாலை+91 9787270506
13/08/2024

டைமன் கட்டிங் ஒரிஜினல் ஸ்படிங்கமாலை

+91 9787270506

மனத்தக்காளி கீரை  செரிமானத்தை ஏர்பத்தும் வாய் புண் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டால் சரிஆகும் பசியை தூண்டும் அல்சர்ருக்கு ...
30/07/2024

மனத்தக்காளி கீரை

செரிமானத்தை ஏர்பத்தும்

வாய் புண் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டால் சரிஆகும்

பசியை தூண்டும்

அல்சர்ருக்கு சிரந்த மருந்து

கீரையாகவும் சாப்பிடலாம்

எமது தோட்டத்தில் இயற்கையாவே முளைத்து இருக்கின்றன

Address

Sri Aachi Online Store
Batlagundu
624220

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ ஆச்சி Online Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஸ்ரீ ஆச்சி Online Store:

Share