26/06/2025
இன்று முதல் #குட்டே
நிறைய நல்ல நல்ல கண்டன்ட் உள்ள திரைப்படங்களை இந்த தமிழ் சினிமா தந்திருக்கிறது. அதன் வரிசையில் அடுத்து ஒரு நல்ல கதைக்களத்துடன் களமிறங்கும் #குட்டே.
நிச்சயம் உங்களை 2 மணி நேரம் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
கதையின்நாயகன் ஒரு இரவு முழுவதும் எத்தனை விதவிதமான மனிதர்களை சந்திக்கிறான் என்பதை காமெடி கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு பிடியிலிருந்தும் விலகி வாழ்க்கையின் கடைசி இடமான சுடுகாட்டில் வாழ்க்கையை மிக நுணுக்கமாக விவரிக்கும் வெட்டியானின் ஆலோசனை கேட்டபிறகு பிரித்வியின் நடிப்பு படம் பார்க்கும் நம் மனதை கணக்க வைக்கும். இறுதியில் எமோஷனலான உணர்வை கொடுத்து மனசை உறைய வைத்திருப்பார்கள்.
குறிப்பாக திருப்பூர் வாழ் குடிமகனாக வாழும் ஒருவனை இந்த சமூகம் (டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி மேனேஜரால்) எப்படி “குடி”மகனாக மாற்றுகிறது. என்பதை உணர்த்துவதுதான் கதை. என்னுடைய நண்பன் என்பதால் சொல்லவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் அறிமுக கதையின் நாயகன் #பிரித்விராஜ்_ராமலிங்கம் நடிப்பில் பிரிச்சு மேஞ்சுட்டார். உடன் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் கலை இயக்குனர் மற்றும் நடிகர் ிஜய்முருகன், #மைனா_நந்தினி, #ஜீவா, #ஆடுகளம்_முருகதாஸ், #போஸ்_வெங்கட் அண்ணன், #காளி_வெங்கட் அண்ணன், அய்யா #வேலராமமூர்த்தி, பாடலாசிரியர் #கார்த்திக்_நேத்தா போன்ற அனைவரும் பாராட்ட தகுந்தவர்கள். 💐💐💐
என் நண்பன் #பிரித்விராஜ்_ராமலிங்கம் பல படங்களில் உதவி, துணை, இணை இயக்குனராக பணியாற்றி தான் இயக்குனராகும் கனவை தள்ளி வைத்துவிட்டு தன் நண்பன் அரவிந்தனை இயக்குனராக்கி அழகு பார்த்து முதன் முதலாக தானே தயாரித்து நடித்திருக்கும் #குட்டே திரைப்படம் கண்டிப்பாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு ஆதரவு தந்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டுமென தாழ்மையோடும் அன்போடும் வேண்டுகிறேன். மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
நல்ல (சின்ன) படங்களை தயவுசெய்து அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்.
மிக்க நன்றி 🙏
வீரமணி கணேசன்
கலை இயக்குனர்