08/05/2024
தன்னோட கனவ நோக்கி ஓடிக்கிட்டு இருக்கவன் ஒவ்வொரு முறை தோக்கும் போதும் அவன் ஒடஞ்சு போறது இல்ல..ஆனா,இன்னும் அதிகமா
அவன ஒடச்சிக்கிறான்..
அவமானப் படும் போது முட்டி வர அழுகைய முழுங்கிட்டு பேசாம போறான்..
வாழ்க்கைல எல்லோருக்கும் கடக்க முடியாத கடினமான தருணம்
ஒண்ணு இருக்குன்னா
அது நாம கண்ட கனவு இனிமே
நிறைவேற வாய்ப்பே இல்லன்னு
Accept பண்ணிகிட்டு கைவிட்ற
நொடி தான்..
இங்க ஒரு Statement இருக்கு..
ஜெயிச்சா தான் பேசணும் ன்னு..
தோத்து போனவங்க உக்காந்து அழணும் இல்ல பேசக் கூடாதுன்னு..
சொல்லப்போனா,
ஜெயிச்சவன விட தோத்துப் போனவங்க கிட்ட தான் நிறைய வலி இருக்கும்..
இந்த தோத்துப் போறது ஒண்ணும் அசிங்கம் இல்லை..Try பண்ணாம இருக்குறது தான் தப்பு..
A.P.J Abdulkalam Sir ஒரு Quote la,
Don’t read success stories, you will only get a message. Read failure stories, you will get some ideas to get success.
அப்டின்னு எழுதியிருப்பாரு..
முயற்சி பண்ணி தோத்துப் போனவனுக்கும் இங்க பேச
சம உரிமை இருக்கு..
தோத்து போனவன மட்டம் தட்டிப் பேசறது,
அவன் passion a பாத்து சிரிக்கிறது,
இந்த Dream எல்லாம் சோறு போடாதுன்னு சொல்றது
எல்லாத்தையும் கொஞ்சம் ஓரமா வைங்க..
ஜெயிக்கறது தோக்கறது எல்லாம் அவன் அவன் perspective. ஒரு Benchmark a fix பண்ணிகிட்டு யாரையும் Compare
பண்ணி பாத்துட்டு அவன் ஜெயிச்சசிட்டான் இவன் தோத்துட்டான்னு Define பண்ணாதீங்க..
At the end of the Day ஜெயிச்சமா தோத்தமா ன்றத விட எவ்ளோ Happya இருக்கோம் ன்றது தான் important.
சில நேரங்களில் ஜெயிச்சவன் கூட
எங்க இன்னொருத்தன் ஜெயிச்சி
நமக்குப் போட்டியா வந்துடுவானோன்னு நினைப்பாங்க..
ஆனா, போராடி தோத்துப் போன யாரும் இன்னொருத்தன் தோத்துப் போறத
பாக்க விரும்ப மாட்டாங்க..
யார் என்ன வேணாலும் சொல்லட்டும்,
"இங்க நீ தோத்தியா ஜெயிச்சியா ன்னு அடுத்தவன் சொல்லக்கூடாது..உனக்கு உள்ள இருக்கவன் சொல்லணும்..
புத்தி உள்ளவன் ஜெயிப்ப்பான்
போய் வேலையை பாரு.."
படித்ததில் பிடித்தது..... உண்மை உள்ளது 👍
ரஹ்மத் அலி
politics politics politics & province politics politics oil politics # Economy politics politics #...