Podhigai Herbs & Organic Store

Podhigai Herbs & Organic Store Discover the best herbal organic products at Podhigai Herbs. Enhance your wellness routine with our carefully selected raw and dry herbs. Shop now!

Podhigai Herbs offers a wide variety of herbal products for better health and energy.

❤️🔥🐂
04/10/2024

❤️🔥🐂

இருமலை இல்லாமல் ஆக்கலாம் வாங்க பார்க்கலாம் !!!நாள் பட்ட இருமலா கவலைவேண்டாம் 15 நாட்களில் பறந்து போக வைக்கலாம், இயற்கை நம...
23/09/2024

இருமலை இல்லாமல் ஆக்கலாம் வாங்க பார்க்கலாம் !!!

நாள் பட்ட இருமலா கவலைவேண்டாம் 15 நாட்களில் பறந்து போக வைக்கலாம், இயற்கை நமக்கு குடுத்த மூலிகையை வைத்து நம் வீட்டிலே நாமலே ஆரோக்கியனம முறையில் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
சித்தரத்தை - 30 கிராம்

பேரீச்சங்காய் - 30 கிராம்

உலர்ந்த திராட்சை - 30 கிராம்

சுக்கு - 30 கிராம்

சோம்பு - 30 கிராம்

அதிமதுரம் - 30 கிராம்

அத்திப்பழம் - 30 கிராம்

ஏலக்காய் - 30 கிராம்

செய்முறை :
வாருங்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் ;
மேற்கண்ட அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள், ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பசும் பால் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 1/2 லிட்டர் தண்ணீர் கலக்கவும் அத்துடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் பாலில் கலந்து நன்றாக கொதிக்க விடவும் 1/4 லிட்டர் வரும் வரை நன்றாக சுண்ட கட்சி பின் பாலை நன்றாக வடிகட்டி தினமும் காலை மற்றும் மாலை என தினமும் இரண்டு வேளை பருகவும் இவ்வாறாக தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் இருமல் இல்லாமலே போய்விடும். தேவையான மூலிகை பொருட்களை தேடி எங்கும் அலைய வேண்டாம் நண்பர்களே பொதிகை ஹெர்ப்ஸ் என்ற இணையதளத்தில் ஒன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்துகொள்ளலாம். வாழ்த்துக்கள் நண்பர்களே இயற்கையோடு இணைந்திருப்போம் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக வாழலாம் இப்படிக்கு உங்கள் இயற்கை நண்பன் பொதிகை ஹெர்ப்ஸ்

ஆஸ்துமாவை அலறவிடும் அதிமதுரம் வாங்க பாக்கலாம் !!!அதிமதுரத்தை பற்றி சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டவை இதோ உங்களுக்காக.அதி...
23/09/2024

ஆஸ்துமாவை அலறவிடும் அதிமதுரம் வாங்க பாக்கலாம் !!!

அதிமதுரத்தை பற்றி சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டவை இதோ உங்களுக்காக.

அதிமதுரத்தின் அற்புதம் இருமல், தொண்டைப்புண், சளி, தலைவலிக்கு சிம்ம சொப்பனம் என்பது மிகை அல்ல ,

மருந்து தயாரிக்க தேவையானவை
அதிமதுரம் - 100 கிராம்

மிளகு - 25 கிராம்

தனியா { கொத்தமல்லி } - 100 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

மேற்கொண்ட மூன்றையும் நன்றாக பொடி செய்துக்கொள்ளுங்கள், பின் சர்க்கரையையும் நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும் பின் பொடி செய்து வைத்திருக்க அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து ஒரு பாடலில் சேகரித்து வையுங்கள், தினமும் காலையிலும் மாலையிலும் மறக்காமல் ஒரு தேக்கரங்கட்டி வீதம் சாப்பிட்டு வந்தால் போதும் ஆத்துமாவில் இருந்து நீங்கள் விடுபடுவதை உணருவீர்கள்,மருந்துக்கு தேவையானதை எங்கும் தேடி அலைய வேண்டாம் உங்கள் இயற்கை நண்பன் பொதிகை ஹெர்ப்ஸ் என்ற இனைய தளத்தை சொடுக்கி மிக எளிதாக நீங்கள் வாய்ங்கிக்கொள்ளலாம், இயற்கையோடு இணைந்து இன்பமாய் வாழ்வோம் வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் இயற்கை நண்பன் பொதிகை ஹெர்ப்ஸ்

ஆஸ்த்துவமும் அதிமதுரமும் !!!
23/09/2024

ஆஸ்த்துவமும் அதிமதுரமும் !!!

Authentic Herbals in Chennai, Organic store in Chennai, Where to buy herbal powders, Pothigai Herbs, Herbal online, Organic store in chennai

வால்மிளகின் அற்புத மருத்துவ குணங்கள் !!வால் மிளகு: வால்மிளகு (Piper Cubeba) என்பது, ஒரு வகையான மூலிகைக் கொடியில் காய்ப்ப...
17/09/2024

வால்மிளகின் அற்புத மருத்துவ குணங்கள் !!

வால் மிளகு: வால்மிளகு (Piper Cubeba) என்பது, ஒரு வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால், வால்மிளகு எனப் பெயர் பெற்றது. இதன் மணத்திற்காக சமையலில் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில், பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கு பயன்படுகிறது.

வால்மிளகின் மருத்துவ குணங்கள்:-

1. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன

2. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

3. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.

4. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. 5. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.

6. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.

7. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.

வால்மிளகின் விரிவான மருத்துவப் பயன்கள்( Health Benefits of Tailed Pepper):

* மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

* மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.

* சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.

* அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.

* மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.

* இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.

* நொச்சி இலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகை தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்தால் மலேரியா ஜுரம் கட்டுப்படும்.

* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சிறிது சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

* மிளகை தினமும் சமையலில் பயன்படுத்தி வர பல் வலியில் இருந்து முடக்கு வாதம் வரையிலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கும்.

* மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும்.

* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

* ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் மிளகைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.

* வயிறு மந்தமாக இருந்தால் கால் தேக்கரண்டி அளவு மிளகுப் பொடியை மோரில் கலந்து குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். இது தவிர, வாயு சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிளகு அரும் மருந்தாக உள்ளது.

* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

* கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும் .

* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

* மிளகைப் பொடி செய்து குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

* மிளகை தட்டிப் போட்டு காய்ச்சிய பாலில் அதனை போட்டு இரவில் குடித்தால் ஜலதோஷம் தலைபாரம் குறையும்.

* மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.

* மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா எல்லாம் சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.

* ஏழு, எட்டு மிளகை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* தினமும் பத்து மிளகை உண்டு வர ரத்தம் சுத்தமாகும்.

* மிளகை தினமும் உணவில் சேர்த்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.

* கனிந்த வாழைப் பழத்தின் உள்ளே மிளகுப் பொடியை வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் விரைவில் ஆஸ்துமா நோய் குணமாகும்.

* மிளகு, ஜாதிக்காய், சந்தனம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருத் தொல்லைகள் வராது. முகம் பளபளக்கும்.

வால் மிளகு பெரும்பாலும் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். நமது பொதிகை ஹெர்பல்ஸ் இணையதளத்தில் எளிதாக ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பார்கள்

சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி "நம் வீட்டைச் சுற்றி ஏராளமான அபூர்வ மூலிகைகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் அருமை நமக்குத...
14/09/2024

சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி

"நம் வீட்டைச் சுற்றி ஏராளமான அபூர்வ மூலிகைகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் அருமை நமக்குத் தெரிவதில்லை. நாம் நடக்கும் திசையெல்லாம் முளைத்துக்கிடக்கும் 'சொடக்குத் தக்காளி' என்ற செடியின் இலைகளும் பழங்களும் நிறைய நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது''

அப்படி நம்மை சுற்றி மிக எளிதாக தானாகவே வளர்ந்து கிடக்கும் பொக்கிசம் தான். சொடக்கு தக்காளி. “சொடக்கு தக்காளி” பெயரே ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் இதுவும் ஒன்று. இது நம் நாட்டில் ஏதோ கடைகளில் கிடைக்கும் என்று எண்ணக் கூடாது. இதனை சாதாரணமாக சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும், குப்பைகளிலும் காண முடியும்.

நம் நாட்டில் இப்பழம் சந்தைப்படுத்த படவில்லை. எனவே நகர்புறங்களில் இருப்பவர்கள் இதனை மிகக்குறைந்தளவே அறிந்திருப்பர். இப்பழமானது பலூன் போன்ற உறையினுள் இருக்கும்.

கிராமங்களில் சிறுவர்கள் முதிர்ந்த இப்பழத்தின் பலூன் போன்ற உறையினை வாயினால் ஊதி தலையில் உடைத்து விளையாடுவர்.

இப்பழத்தினை தலையில் உடைக்கும்போது சொடக்கு போட்டால் ஏற்படும் ஓலியை ஒத்து இருக்கும். மேலும் இப்பழம் பார்ப்பதற்கு தக்காளியை போல இருக்கும். எனவே இது சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படுகிறது. இதை காட்டுத்தக்காளி என்றும் அழைப்பர்.

சொடக்கு தக்காளி சோலோனேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்டோர் இதனுடைய உறவினர்கள் ஆவர். இதனுடைய அறிவியல் பெயர் பைசாலிஸ் மினிமா என்பதாகும். இப்பழமானது அசத்தலான தனித்துவமான இனிப்பு சுவையுடன் அனைவரையும் சொக்க வைக்கும்.

சொடக்கு தக்காளியின் அமைப்பு மற்றும் வளரிடம்:

சொடக்கு தக்காளியானது செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இச்செடியானது 90 செமீ உயரம் வரை வளரும். இது ஓராண்டுத் தாவரமாகும். இத்தாவரத்தின் தண்டுப்பகுதியானது கிளைத்துக் காணப்படுகிறது. இலைகள் 10 செமீ நீளத்தில் காணப்படுகின்றன.
இச்செடியில் பச்சை கலந்த மஞ்சள் அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் வண்ணத்தில் 2 செமீ பூக்கள் பூக்கின்றன. பூக்கள் தண்டுப்பகுதியிலிருந்து தொங்குகின்றன. பூக்களிலிருந்து உறை போன்ற பையினுள் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன. உறைகள் பார்ப்பதற்கு பலூன் போன்று காட்சியளிக்கிறது. இக்காய்கள் முற்றி பழமாகும் போது உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

உறையினுள் உள்ளே உள்ள காயானது மஞ்சள் கலந்த பச்சை அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் பளபளப்பாக இருக்கும். உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறி காய் பழுத்தவுடன், பழமானது உறையுடன் சேர்ந்து உதிர்ந்து விடும். இப்பழமானது 1.5 செமீ அளவில் இருக்கும்.

இச்செடியானது பெரும்பாலும் களைச் செடியாகவே கருதப்படுகிறது. மழைகாலங்களில் இதனை அதிகம் காணலாம். இத்தாவரம் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியே இதனுடைய தாயகமாகும்.

சொடக்கு தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

இப்பழத்தில் விட்டமின் ஏ, சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்) போன்றவை காணப்படுகின்றன. மேலும் இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளன.

இதில் நார்ச்சத்து, புரோடீன், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து முதலியவையும் இருக்கின்றன. டானின் மற்றும் பெக்டின் போன்றவையும் காணப்படுகின்றன.

சொடக்கு தக்காளியின் மருத்துவப் பயன்கள்:

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கத்தை நீக்க

சொடக்கு தக்காளியின் வேர்பகுதியில் ஆல்காய்டுகள், ஃப்ளவனாய்டுகள் காணப்படுகின்றன.

இவை சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கம் எனப்படும் ஃபைப்ரோஸிஸை நோயைக் குணப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.எனவே இப்பழத்தினை அடிக்கடி உண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கம் என்னும் நோயைக் குணமாக்கலாம்.

இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் நோய்களைத் தடுக்க:

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கத்தை நீக்க

சொடக்கு தக்காளியின் வேர்பகுதியில் ஆல்காய்டுகள், ஃப்ளவனாய்டுகள் காணப்படுகின்றன.

இவை சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கம் எனப்படும் ஃபைப்ரோஸிஸை நோயைக் குணப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.எனவே இப்பழத்தினை அடிக்கடி உண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கம் என்னும் நோயைக் குணமாக்கலாம்.

இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் நோய்களைத் தடுக்க:

இப்பழத்தில் இரும்புச் சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாடால் உண்டாகும் நோய்களான அனீமியா, சோர்வு, அறிவுத்திறன் குறைவு உள்ளிட்டவைகளால் பாதிப்படைந்தவர்கள் இப்பழத்தினை உண்டு நிவாரணம் பெறலாம்.

கீல்வாதத்தால் உண்டாகும் வலி குறைய:

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி3(நியாசின்) உடலில் எல்லா பாகங்களுக்கும் இரத்த ஓட்டத்தை செலுத்த அவசியமானதாகச் செயல்படுகிறது.

கீல்வாதம் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட இடத்திற்கு விட்டமின் பி3 தேவையான இரத்தத்தை செலுத்துகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வலி குறைவதோடு மூட்டுகளை எளிதாக அசைக்கவும் உதவுகிறது.

140 கிராம் அளவுள்ள இப்பழத்தில் 24.5 சதவீதம் விட்டமின் பி3 உள்ளது.

ஆரோக்கியமான இதயச் செயல்பாடுகளுக்கு:

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) அசிடைல்சோலைன் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இவ்வேதிப்பொருளானது நரம்புகள் மற்றும் தசைகளுக்கு செய்திகளைக் கடத்தும் நரம்பியக் கடத்தியாகச் செயல்படுகிறது.

விட்டமின் பி1 குறைபாட்டால் நரம்பியக் கடத்தியின் செயல்திறன் குறைந்து இதயத்துடிப்பானது சீரற்றதாகிவிடும். எனவே நாம் இப்பழத்தினை உண்டு ஆரோக்கியமான இதயச் செயல்பாடுகளைப் பெறலாம்.

அறிவாற்றல் திறன் மேம்பட:

இப்பழத்தில் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகளவு காணப்படுகின்றன. இவை மனஅழுத்தம் மற்றும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் புலனுணர்வு உறுப்புகளில் உண்டாகும் அடைப்புகளை நீக்கி அறிவாற்றலை மேம்படச் செய்கிறது.

அல்சைமர்ஸ், டிமன்சியா போன்ற அறிவாற்றல் சார்ந்த மூளை பாதிப்பு நோய்கள் ஏற்படாமல் இப்பழஆன்டிஆக்ஸிஜென்டுகள் உதவுகின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நினைவாற்றல் அதிகரிப்பு, கவனம், மூளை செறிவு திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பெறலாம்.

செரிமானம் மற்றும் செரிமானப் பாதை மேம்பாடு அடைய:

இப்பழத்தில் பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இச்சத்து உணவினை நன்கு செரிமானம் அடையச் செய்வதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. மேலும் செரிமான உறுப்புகளில் காணப்படும் பிரச்சினைகளையும் தீர்க்கிறது.

சொடக்கு தக்காளி இலைகளை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சொடக்கு தக்காளி இலை, மஞ்சள் பொடி.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் சொடக்கு தக்காளி இலை, காய்களை நீர்விட்டு சுத்தப்படுத்தி நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். உடல்வலி, மூட்டுவலி பிரச்னை இருப்பவர்கள் காலை, மாலை குடித்துவர வலி குணமாகும். புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துவர புற்று செல்கள் பரவுவது தடுக்கப்படும். சர்க்கரை நோய், உயர் ரத்தம் உள்ளவர்களும் இந்த தேனீரை எடுத்துவர பயன்தரும்.

புற்றுநோய்க்கு அற்புதமான மருந்தாக சொடக்கு தக்காளி விளங்குகிறது. இது, நீரை வெளியேற்றும் வேதிப் பொருட்களை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

மணித்தக்காளியை போன்று காணப்படும். நுரையீரல், மூளை, மார்பக புற்றுவராமல் தடுக்கிறது.சொடக்கு தக்காளியை பயன்படுத்தி இளம் தாய்மார்களுக்கான பால் சுரப்பை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.சொடக்கு தக்காளி இலை பசையுடன், வினிகர் சேர்த்து கலந்து மார்பகத்தின் மீது பற்றாக போடும்போது பால் சுரப்பு அதிகரிக்கும். சொடக்கு தக்காளியின் காய் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது.

சொடக்கு தக்காளி இலைகளை பயன்படுத்தி சர்க்கரை நோயினால் உண்டாகும் புண்கள், ஆறாத புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்னணய் எடுக்கவும். இதனுடன் சொடக்கு தக்காளி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இந்த தைலத்தை பூசிவர சர்க்கரை நோயினால் உண்டான புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். சொடக்கு தக்காளி உணவாகி மருந்தாகிறது.

பூஞ்சை காளான்கள், கிருமிகளை போக்கும். தொற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை கட்டிகளையும் கரைக்கும்.ஆஸ்துமாவுக்கான எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும்.இக்காலகட்டத்தில், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் சிரமப்படுவார்கள். இப்பிரச்னைக்கு வில்வம், திப்பிலி ஆகியவை மருந்தாகிறது. வில்வ இலையை பொடித்து அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் திப்பிலி பொடி அரை ஸ்பூன் சேர்க்கவும். பின்னர், தேனுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ஆஸ்துமா நாளடைவில் அகன்று போகும். சுவாச கோளாறு சீர்பெற்று ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கையாக வளரும் இயல்புடைய சொடக்கு தக்காளியை நாம் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து பழத்தினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

இது போன்று மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள் மற்றும் அதன் பயன்களை தெரிந்துகொள்ள நம் பொதிகை வலைதளத்தில் இனைந்திருங்கள்.

உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்.

https://www.podhigaiherbs.com/product/241/immune-care-combo-pack.html

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ் #நாட்டுமருந்துகடை

அதிமதுரம் பொடி,இருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம் பொடி..ஏராளமான நோய், குறைபாடுகளை சரிசெய்யக்கூடியது. அதிமதுரச் சூரணத்தை...
26/08/2024

அதிமதுரம் பொடி,
இருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம் பொடி..ஏராளமான நோய், குறைபாடுகளை சரிசெய்யக்கூடியது. அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

காலாணிகள்:

அதிமதுரப் பொடியை கடுகெண்ணை (அ) நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.
மலச்சிக்கல்:
அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது.


வயிற்றுப்புண் குணமாக:
அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும், பின்பு மறுநாள் காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூட்டுவலிக்கு:
நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் (licorice powder) குடிப்பது நிவாரணமளிக்கும்
சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் அதிமதுரம் பயன்படுகிறது.

இவ்வளவு அதி அற்புதமான அதிமதுரம் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு அருமருந்து நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

https://www.podhigaiherbs.com/product/189/athimadhuram-ver-licorice-powder-50-gram.html
#மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ் #நாட்டுமருந்துகடை

பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும் அழகிற்கு முல்தானி மிட்டி – Benefits of Multani mitti முல்தானி மெட்டி என்று பிரபலமாக அழைக்க...
21/08/2024

பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும் அழகிற்கு முல்தானி மிட்டி – Benefits of Multani mitti
முல்தானி மெட்டி என்று பிரபலமாக அழைக்கப்படும் fuller’s earth ஒரு வகை களிமண் ஆகும், இது சருமத்தின் தரம் மற்றும் அமைப்பை அழகுபடுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுகிறது. இது பிற சாதாரண மண்களிலிருந்து மிகவும் மாறுபட்ட இருக்கிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் ஓர் இயற்கையான வழி முறையாகும். பல்வேறு முக மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் முல்தானி மெட்டி பயன்படுகிறது. பெரும்பாலும், பாகிஸ்தான் தளத்தில் காணப்படும் முல்தானி மெட்டியில் தோல் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இன்றையப் பதிவில் முல்தானி மெட்டியின் நன்மைகள் பற்றி ஆராய்வோம்.

முல்தானி மெட்டியில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், சிலிக்கா, டோலமைட் மற்றும் கால்சைட் ஆகியவை உள்ளன. இவை ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

முல்தானி மெட்டியின் நன்மைகள்:
முல்தானி மெட்டி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

பொடுகுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats dandruff) :
தற்போதைய சூழலில், மாசு காரணமாக பொடுகு மற்றும் உச்சந்தலையில் வறட்சி ஆகிய சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. முல்தானி மெட்டி பல ஆண்டுகளாகவே தலையில் உண்டாகும் பொடுகு பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பொடுகை நீக்கி தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனை பயன்படுத்த, ஒரு கிண்ணத்தில் நான்கு டீஸ்பூன் முல்தானி மெட்டி தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை கலந்து ஒரு கலவையைத் தயாரித்து கொள்ளவும். இதை, உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். சிறந்த முடிவுகளைப் பெற வாரத்திற்கு இரண்டு முறை இந்த செயல்முறையை செய்யவும்.

முகப்பருவை குணப்படுத்துகிறது (Treats pimples):
முல்தானி மெட்டி சருமத்திலுள்ள எண்ணெயை உறிஞ்சுவதன் மூலம், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது. முகப்பருக்கள் நீங்க வேப்ப இலைகள், முல்தானி மெட்டி, கற்பூரம் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும்
சருமத்தின் இறந்த செல்களை நீக்குகிறது (Removes dead skin cells):
சருமத்திலுள்ள அழுக்கை நீக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் முல்தானி மெட்டி பயனுள்ளதாக இருக்கிறது. முல்தானி மெட்டி, கிளிசரின் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்டை தயாரித்து கொள்ளவும். இதை, முகத்தில் தடவி காய்ந்த பின் வெதுவெதுபான தண்ணீரில் கழுவ வேண்டும். (மேலும் படிக்க – முகப்பொலிவிற்கு பொதிகை ஹெர்பல்ஸின் முத்தான மூன்று பரிந்துரைகள்)
கூந்தலிலுள்ள பிளவு முனைகளைத் தடுக்கிறது (prevents split ends in the hair):
முல்தானி மெட்டி கூந்தலில் ஏற்படும் பிளவு முனைகளின் சிக்கலைத் தவிர்க்கிறது மற்றும் முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. முல்தானி மெட்டியைத் தலைமுடியில் தடவிய பின், ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவுங்கள். (மேலும் படிக்க- வெயிலில் கருத்த சருமத்தை பொலிவாக்கும் சந்தானம் பேஸ் பேக் !!)
சோர்வை நீக்குகிறது (Relieves fatigue) :
கைகள் அல்லது கால்களில் வலியை ஏற்படுத்தக்கூடிய காயங்களுக்கு முல்தானி மெட்டியைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் இதைப் பயன்படுத்துவதன் மூலம், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இயலும்.
முல்தானி மெட்டியின் பக்க விளைவுகள் (Side effects of Multani mitti )
முல்தானி மெட்டி ஒரு நல்ல இயற்கை மூலிகை என்பதால் பெரும்பாலும், இது குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும், முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் பயன்பாட்டு முறைகளை அறிவது மிகவும் முக்கியமாகும்.

கலப்பு வகை தோல் உள்ளவர்களுக்கு, முல்தானி மெட்டியை முகத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில், முல்தானி மெட்டி அத்தகைய தோல் வகையை வறண்டு போக வைக்கிறது. எனவே, முல்தானி மெட்டியை பால் மற்றும் பாதாமுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது சளி மற்றும் இருமலுக்கு வழிவகுக்கிறது. எனவே, உங்களுக்கு சளி இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.

பெரும்பாலும், பெண்கள் ஏராளமான அழகுசாதனப் பொருட்களைத் தோலில் பயன்படுத்துகிறார்கள். மாறாக தோலை பராமரிக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

சருமத்திற்கு முல்தானி மிட்டி செய்யும் அற்புத நன்மைகள்:
பளபளப்பான சருமத்திற்கு முல்தானி மிட்டி உதவி செய்கிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். எப்படி முல்தானி மிட்டியை பயன்படுத்தி பளபளப்பான சருமம் பெறலாம் என்று மேலும் பார்க்கலாம்.

தேவையானவை:

ஒரு ஸ்பூன்ஃபுல் முல்தானி மிட்டி

ஒரு ஸ்பூன்ஃபுல் தக்காளி சாறு

ஒரு ஸ்பூன்ஃபுல் சந்தனப் பொடி

நான்காவது டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள்

ஒரு துண்டு

எப்படிப் பயன்படுத்துவது:

முகத்தை நன்கு கழுவி, ஒரு துண்டு கொண்டு உலர வைக்கவும்.ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட் செய்யுங்கள்.

இப்போது இந்த பேஸ்டை ஃபேஸ் பேக் போல உங்கள் முகத்தில் தடவவும். கண்கள் மற்றும் வாயைச் சுற்றியுள்ள மென்மையான தோலுக்கு இந்த பேக் பொருந்தாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பேக்கை 15 நிமிடங்கள் அல்லது உலர்ந்த வரை விடவும்.

பின்னர் அதை ஈரமான துண்டுடன் துடைத்து, முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

எண்ணெய் சருமத்திற்கு முல்தானி மிட்டியின் நன்மைகள்:

முல்தானி மிட்டி பெரும்பாலும் எண்ணெய் சருமத்திற்குத் தான் அதிக நன்மைகள் தருகிறது. அதன் நன்மைகளை எப்படிப் பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

தேவையானவை:

ஒரு ஸ்பூன்ஃபுல் முல்தானி மிட்டி

ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் (தேவைக்கேற்ப)

ஒரு துண்டு

எப்படிப் பயன்படுத்துவது :
உங்கள் முகத்தை நன்கு கழுவி, ஒரு துண்டுடன் துடைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் தயார் செய்யவும்.

இப்போது இந்த ஃபேஸ் பேக்கை முழு முகத்திலும் தடவவும். கண்களை மற்றும் உதடுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஃபேஸ் பேக் உலரும் வரை அதை விட்டு விடுங்கள்.

உலர்ந்த பிறகு, லேசான கைகளால் ஈரமான துண்டுடன் முகத்தைத் துடைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

சருமத்திற்க்கு அரோக்கியமான இயற்க்கை மூலிகைகள் மற்றும் அழகுசாதன பொருட்களை பொதிகை இனையதளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பயன்படுத்துங்கள். பல்வேறு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனம்.
அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ் #நாட்டுமருந்துகடை

kuppaimeni power you can buy now https://www.podhigaiherbs.com/products/kuppaimeni-podi-indian-nettle-powder/16583610000...
19/08/2024

kuppaimeni power you can buy now https://www.podhigaiherbs.com/products/kuppaimeni-podi-indian-nettle-powder/1658361000000071309

குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர்.

மருத்துவ குணங்கள்:

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

Address

No. 3A Thillai Nathamuni Avenue, (near DLF Right Side Gate) Mugalivakkam
Chennai
600125

Alerts

Be the first to know and let us send you an email when Podhigai Herbs & Organic Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Podhigai Herbs & Organic Store:

Share