20/08/2024
மழைக்கு பின் கையால் களை எடுத்து களைகளை அப்புறப்படுத்தியாச்சுங்க.
மஞ்சள் பயிர் இரண்டரை மாத வயதை எட்டி இருக்குங்க. பயிர் நல்ல திடகாத்திரமா வளர்வதற்கு மேல் உரமா மக்கிய ஆட்டு எரு கொடுத்துட்டு இருக்கிறோம். ஆட்டு எரு மிகவும் மெதுவா தன் சத்துக்களை இளகி கொடுக்கும், இதனால் பயிர் வளர்ச்சிக்கு சீராக உரம் கிடைக்கும்.
இது போக நோய் வரும்முன் காப்பதற்கு வேப்பங்கொட்டையை இடித்து கோமயத்தில் ஊறல் போட்டு வைத்திருக்கிறோம். பத்து இலை கசாயமும் தயாராகவே இருக்குங்க.
இரண்டையும் ஒருசேர கலந்து பயிருக்கு தெளிக்கும் போது தண்டுதுளைப்பான் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்ங்க. கடந்த இரண்டு வருசமா இதே வழிமுறையில் தான் தண்துளைப்பானின் பாதிப்பில்லாமல் மஞ்சள் பயிரை காப்பாற்றி வருகிறோம்ங்க.
நன்றி,
மகிழம் இயற்கை வேளாண் பண்ணை
ஒழல்பதி கிராமம்
கிணத்துக்கடவு மேற்கு
கோயமுத்தூர் மாவட்டம்.