Dr.Karumbu

Dr.Karumbu The best and Most Hygenic Sugarcane Juice Parlour...

24/09/2023
15/05/2020
Try our seasonal treat...
01/07/2019

Try our seasonal treat...

வணக்கம்..கேரளாவில் களநிலவரம்,நண்பர்களே..  கேரளாவில் தற்போது என்ன நிலையில் இருக்கிறது, அடுத்துகட்ட செயல்பாடுகளை பற்றி முட...
20/08/2018

வணக்கம்..
கேரளாவில் களநிலவரம்,

நண்பர்களே.. கேரளாவில் தற்போது என்ன நிலையில் இருக்கிறது, அடுத்துகட்ட செயல்பாடுகளை பற்றி முடிவெடுக்க இன்று நம் செம்மை நண்பர்கள் நால்வர் கேரளாவிற்கு சென்று பார்த்து வந்தோம்.

நெம்மாரா தற்போது ஓரளவு நல்ல நிலையில்தான் இருக்கிறதாக தெரிந்தது. அடுத்து பாலக்காடு வந்த போது நகரம் இயல்பாகவே இருந்தது. பின்பு பாலக்காடு, சுண்ணாம்புதுறா, சுந்தரம் காலணி என்ற ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். அங்கு அவர்கள் அனுபவிற்கும் வலியை வார்த்தைகளால் வெளிப்பத்த இயலாது.

மொத்தம் உள்ள 125 வீடுகளில், கால்வாய் ஒட்டி அமைந்திருக்கும் 39 வீடுகளில் சுவர் மட்டுமே மீதம். மொத்ததையும் இழந்து இருக்கிறார்கள்.

இரண்டு அணைகளில் இருந்து வெள்ளம் திடீர்யென நள்ளிரவில் வந்ததில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மேட்டுப்பகுதிக்கு வர மட்டுமே முடிந்த அவர்களால், தவணை முறையில் சிறிது சிறிதாக சேர்த்த பொருட்களோடு, Adhar card, Driving licence, school certificate-னு எந்த ஒன்றையும் எடுத்தவர இயலாமல் அனைத்தும் நீரில் அடித்துசெல்லப்பட்டதாக கூறினர்.

இன்று வெள்ளம் வடிந்த நகரம் இயல்புக்கு வந்தும் கூட இந்த பகுதி இருக்கும் நிலமையோ மிக பரிதாபம். மின்சாரம் இல்லை. சமைக்க பாத்திரங்கள் இல்லை. மாற்ற வேறு உடுப்பு இல்லை. உறங்க போர்வையோ, தலையனையோ இல்லை. கழிவறைக்கு வாளி கூட இல்லை. அழ கண்ணீர் கூட இல்லை அவர்களிடம்.

உடனடியாக நாம் அவர்களுடைய அடிப்படை தேவைகளையாவது பூர்தி செய்து கொடுக்க வேண்டும்.

அங்கு உள்ள மிக பாதிக்கப்பட்டுள்ள அந்த 39 குடும்பங்களில் இருப்பவர் விவரம் வாங்கிவந்துள்ளோம்.

அந்த குடும்பங்களுக்கு அனுப்ப வேண்டிய கீழ்கண்ட பொருட்களை நாம் அனைவரும் சேகரித்து அனுப்பிவைக்க வேண்டி உள்ளது.
1. சமைக்க சிறிது எண்ணிக்கையில் பாத்திரங்கள்.
2. மாற்றுஉடைகள்.
3. போர்வைகள்.
4. கோரைப்பாய்கள்.
5. தலையணைகள்.
6. Buckets and mugs.

பங்களிப்பு செய்ய விருப்பமிருப்பின் மணிகண்டன்-
9942660988, அசோக்- 9843022181
என்ற எண்களுற்கு தொடர்பு கொள்ளலாம் (அ) வாட்ஸ்அப் செய்யலாம்.

இதுவரை பங்களிப்பு செய்துள்ள அனைத்து இறை உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

இணைவீர் இறைப்பணிக்கே!
அகல் எனும் அறப்பணிக்கே!!

அன்புடன்
செம்மை அகல் பணிக்குழு

Thanks to Tamil Nadu Government for this wonderful initiative...Let's everybody support...
19/06/2018

Thanks to Tamil Nadu Government for this wonderful initiative...
Let's everybody support...

08/06/2018

நண்பர்களே,

செம்மை நீர்நிறை (இராமநாதபுரம்) செயற்களத்தின் முதன்மைப் பணிகள் துவக்கப்படுகின்றன.

இராமநாதபுரம் நகரைத்தைச் சுற்றிப் பரந்து விரிந்திருக்கும் பழம்பெரும் நீர்நிலை சக்கரக்கோட்டைக் கண்மாய். இராமானுஜ அப்பச் சேரி என்று வழங்கப்பட்ட கண்மாயின் ஒருபகுதி இது. 1950களில் பெருவெள்ளம் பாய்ந்து இரமானுஜ அப்பச்சேரி கண்மாய் அழிந்துபோனது. அதன் மீதமுள்ள பகுதி மட்டும் சக்கரக்கோட்டைக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. சக்கரக்கோட்டை என்பது இப்பகுதியிலுள்ள ஊர் ஒன்றின் பெயர்.

சக்கரக்கோட்டைக் கண்மாய் நீர் நிறைந்து இருக்கையில், ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். பல்லாயிரம் மக்களுக்குக் குடிநீர் வழங்கிய கண்மாய் இது. பலகோடிச் சிற்றுயிரிகளும் பல்லாயிரம் பேருயிரிகளும் வாழத்தக்க நீர்நிலை இது. இப்போது இக்கண்மாய் சீமைக் கருவேல மரங்களால் மூடப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கைகளால் இதன் ஒருபகுதி, சீமைக் கருவேலம் அகற்றப்பட்டுள்ளது.

சக்கரக்கோட்டைக் கண்மாயின் மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 2,100 ஏக்கர்.

செம்மை நீர்நிறைச் செயல் திட்டத்தின் வழியாக இக்கண்மாயினை நீர்நிறைப் பகுதியாக மாற்ற விழைகிறோம். இதற்கான ஒப்புதல், ஒத்துழைப்பு ஆகியவற்றை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அவருடைய நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) திரு. இராஜா, இச்செயற் களத்தின் பணிகளைத் துவக்கி வைக்கவுள்ளார்.

வரும் 16 ஆம் நாள் (16/06/18 – சனிக்கிழமை) காலை 10 மணிக்குச் செயற்களப் பணி துவக்கம் நிகழும். நீர்நிறைச் செயல்களில் தொண்டாற்ற விரும்புவோர், வருக. இப்பணிக்கான செலவுகளைப் பகிர்ந்துகொள்ள விழைவோர் தம் பங்களிப்புகளைச் செய்யலாம். விருப்பம் கொண்டோர் தொடர்பு கொள்ளுங்கள். ஏற்கெனவே விருப்பம் தெரிவித்தோருக்கும், மடல் எழுத உள்ளோம். இதுவரை, செயற்களம் முடிவாகாமல் இருந்தது. என்ன பணி என்றே தெரியாமல், பங்களிப்பு நிதி பெறுவதில் மனத்தடை இருந்ததே காரணம். இதையும் மீறி, நான் பங்கேற்ற நிகழ்வுகளில் பலர் பங்களிப்புத் தொகை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.

பணியாற்ற, பங்களிக்க முன்வாருங்கள்.
‘பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பணியாற்றுதலே இறைத் தொண்டு’
தொண்டாற்ற வாரீர்!

அன்புடன்,
ம.செந்தமிழன்

06/06/2018

கோவையில்
செம்மை மரபுக் கூடல்!

நீர் நிறை, மரபுக் கல்வி குழுக்கள் அமைப்பு.

ம.செந்தமிழன் நலவுரை - மரபு வாழ்வியல்

செம்மையுடன் இணைந்து தொண்டாற்ற விரும்புவோருக்கான அழைப்பு!

Published in today The Hindu Tamil..
22/05/2018

Published in today The Hindu Tamil..

Address

Raja Annamalai Road, Saibaba Colony And RS Puram
Coimbatore
641011

Opening Hours

Monday 10am - 10:30pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10:30pm

Telephone

919443626667

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Karumbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Karumbu:

Share