Anantham FOOD Products

Anantham FOOD Products Healthy, Natural Food Products

26/07/2018

தேன் தேன் தேன் !!!

தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள் !!!

தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும்
பொருளையும் கெட விடாது !!!

தேனைப்பற்றி
தேனீக்கள் என்ற ஒரு அத்தியாயமே
சுத்த சத்திய புனித
வேதம் திருக்குர்ஆனில் உள்ளது !!!

தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும்

தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது !!!

அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!!

வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன் !!!

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.

தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள்.
இது காய்ச்சிய தேன்.

இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!!

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது !!!
அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை ஏறாது

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.

ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள் )தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

எச்சரிக்கை :- ஆங்கில மாத்திரைகளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !!!

எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது.

அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது.

விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும்.

மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.

தேன் மிகஉயர்ந்த அமிர்தம்.

இது அனைவருக்கும்தெரியும் !!!

ஆனால் அந்த தேனே சிலசமயம் நஞ்சாக மாரி ஆளைக்கொள்ளும் !!!

நாம் எதற்காகவோ ஆங்கில மருந்து சாப்பிட்டுயிருக்கும் போது
பாலில் தேன்கலந்தோ சாப்பிடுவோம்

இனி இதுபோல் செய்யாதீர்கள் !!!

இந்த பரிசோதனையை நீங்கள் செய்துபாருங்கள் !!!

பெரும்பாலான மாத்திரையில் சுண்ணாம்புசத்து அதிகம் உண்டு !!!

சிறிது வெற்றிலைபோடும் சுண்ணாம்பில் தேன்கலந்து கை வைத்து பாறுங்கள் கை கொப்பளிக்கும் அளவு சூடுவரும் !!!

ஒருவர் சுகர்மாத்திரை சாப்பிட்டு
கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக
ஒருஸ்பூன் தேன் குடித்தார் சிறிது நேரம் கழித்து வயிறு எரிந்து வேர்த்து இதயவலிவந்து டாய்லட்போயி அவஸ்தைபட்டு விட்டார் !!!

நல்ல வேளை அவர் வீட்டில் எலுமிச்சம்பழம்
இருந்தது அதைகுடித்து விஷம்முறித்து ஆபத்தில்இருந்து தப்பித்தார் !!!

தயவுசெய்து ஆங்கில மருந்து சாப்பிட்டு இருக்கும் பொழுது மறந்தும் யாரும் தேன் சாப்பிடாதீர்கள் !!!

அது மருந்தை முறித்து உயிரை கொள்ளும் !!!

தெரியாமல்
யாரும்
சாப்பிட்டுவிட்டால் உடனே
எலுமிச்சைசாறு கொடுத்தால் விஷம் முறிவு ஏற்பட்டு
காப்பாற்றி விடலாம்

அதிக கவனம் தேவை !!!

30/01/2016

அல்சரைப் போக்கும் பச்சை வாழைப்பழம்..!

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

மருத்துவ குறிப்புகள் :

1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

2.உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.

3.தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

4.இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

31/12/2015

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு...

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள் உருவாகுவதை..

http://goo.gl/KTXWaU

28/12/2015

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!

தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, இஞ்சி - சிறிதளவு, கற்றாழை - 3-4 துண்டுகள், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

honey
21/12/2012

honey

15/12/2012
KOVAI ENTERTAINMENT sep,oct,nov
10/10/2012

KOVAI ENTERTAINMENT sep,oct,nov

Address

2/16A, Cheran Maanagar, V. K Road
Coimbatore
641018

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+918883033700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anantham FOOD Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category