செய்யது பாதுஷா

செய்யது பாதுஷா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from செய்யது பாதுஷா, Grocers, Ravanasamudram, Kadayam.

மனிதர்கள் உங்களைக் கைவிடக்கூடும், ஆனால் அல்லாஹ், ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டான். அவனை நம்புங்கள், தொடர்ந்து முன்னேறிச...
18/12/2025

மனிதர்கள் உங்களைக் கைவிடக்கூடும், ஆனால் அல்லாஹ், ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டான். அவனை நம்புங்கள், தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். 🤍🪜✨

16/12/2025

. *ஸஜ்தா ஸஹ்வு*

தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும்.

*முதல் இருப்பை விட்டு விட்டால்….*

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
-அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)
ஸஹீஹ் புகாரி

*ரக்அத்தை அதிகமாக்கினால்….*

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்துகள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் ‘தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.’நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்’ என்று ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
-அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஸஹீஹ் புகாரி

*ரக்அத்தைக் குறைத்து விட்டால்….*

நபி (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒரு தொழுகையை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகேசென்று,கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக்கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள் பள்ளியில் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு ‘தொழுகை குறைக்கப்பட்டு விட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டார். ‘குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) ‘துல்யதைன் கூறுவது சரி தானா?’ என்று கேட்க, மக்கள் ஆம் என்றனர். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.
-அபூஹுரைரா (ரலி)
ஸஹீஹ் புகாரி

*ரக்அத் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால்…*

தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததை, அதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
‘உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா?’ என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
-அபூஸயீத் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம்

‘உங்களில் ஒருவர் தொழும் போது ஷைத்தான் அவரிடம் வந்து எத்தனை தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள்.
-அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ, ஸஹீஹ் புகாரி

நான்கு ரக்அத் தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்துகளும் தொழுது விட்டோமா என்று ஒருவருக்குச் சந்தேகப்பட்டால் அவர் மூன்று ரக்அத்கள் தொழுததாக எடுத்துக் கொண்டு, நான்காம் ரக்அத்தை நிறைவு செய்ய வேண்டும். நான்காம் ரக்அத்தின் இறுதியில் ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி இரண்டு தடவை ஸஜ்தாச் செய்ய வேண்டும். அல்லது ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யலாம். மறதிக்காகச் செய்யும் ஸஜ்தாவில் ஓதுவதற்கென குறிப்பிட்ட துஆ எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. எனவே ஸஜ்தாக்களில் எப்போதும் ஓதும் துஆக்களை ஓத வேண்டும்.

16/12/2025

#அஸ்ஸலாமு_அலைக்கும்
#பாங்கு_கடமையாக்கப்_பட்ட_வரலாறு

#நபி (ஸல்) அவர்களும், #ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு #பள்ளிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை செய்கிறார்கள். அப்போது மாறி, மாறி பல கருத்துகளை ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் ஒவ்வொரு வக்துக்கும் நாம் உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று கூறினார். அது நெருப்பு வணங்கிகளான மஜூஸ்களின் வணக்கமாகும் என்று நபியவர்கள் அதை வேண்டாம் என்றார்கள்.

மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் மணி அடிக்கலாம் என்றார். அது நஸராக்களின் வணக்கம். வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் சங்கு ஊதி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றார்.இது முஷ்ரிக்குகளுடைய வணக்கம் வேண்டாம் என்று நபியவர்கள் கூறி விட்டு. இன்ஷா அல்லாஹ் நாளை முடிவெடுப்போம் என்று அனைவரும் சென்று விடுகிறார்கள்.

*அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி)* அவர்களின் கனவிலும், அதே போல உமர் (ரலி) அவர்களின் கனவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி பாங்குடைய முறைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து நாம் சொல்லும் இந்த பாங்கு கடமையாக்கப்பட்டது. பின் வரக் கூடிய ஹதீஸ்களில் இவற்றில் சிலவற்றை காணலாம்.

“அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ( புகாரி 604, முஸ்லிம் 618)

*மரணம்!*_💀மரணத்தைப் பற்றி கூறினாலே,__பயந்து ஓடும் மனிதர்களே!👥_ஒவ்வொரு நொடியும் இந்த உலகை விட்டு யாரோ ஒருவர் வெளியேறி கொண...
12/12/2025

*மரணம்!*

_💀மரணத்தைப் பற்றி கூறினாலே,_
_பயந்து ஓடும் மனிதர்களே!👥_

ஒவ்வொரு நொடியும் இந்த உலகை விட்டு யாரோ ஒருவர் வெளியேறி கொண்டு தான் இருக்கிறார்கள்!!!🥹💔

நாமும் இந்த வரிசையில் தான் இருக்கின்றோம்,
என்பதை உணராமல் இருக்கின்றோம்!🤧

* #மரணம்* கசப்பான உண்மையாக இருந்தாலும் அதனை புரிந்து வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்!!!🥹

12/12/2025

குர்ஆனை மனனம் செய்து அது மறக்காமல் இருக்க வேண்டுமா..?❗
🖊️நீங்கள் குர்ஆனை திறமையாக மனனம் செய்ய விரும்புகிறீர்களா?
*🖊️இதோ சில முக்கிய ஆலோசனைகள்

நீங்கள் மனனம் செய்யும் போது பின்வரும் படி முறைகளைப் பின்பற்றவும்:

1 -குர்ஆனை மனப்பாடம் செய்யும்போது ஒரே குர்ஆனை பயண்படுத்துங்கள் , அதை ஒருபோதும் மாற்றாதீர்கள்.

2 - நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் பக்கத்தின் ஓதலை - ஒரு திறமையான காரியிடமிருந்து (ஆடியோ மூலம் )- பல முறை (5 அல்லது 10 முறை) கேளுங்கள் (செவிசாயுங்கள்) ஓதுவதைக் கேட்கும்போது குர்ஆனைப் பார்த்துக் கொள்ளுங்கள்

3 - நீங்கள்எந்தப் பக்கத்தை மனப்பாடம் செய்ய விரும்புகிறீர்களோ அந்தப் பக்கத்தின் பொருளை படிக்கவும்.

4 - உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் வசனத்தை இருபது முறை ஓதவும் , அல்லது வசனம் நீளமாக இருந்தால் பகுதிகளாகப் பிரிக்கவும், ஒவ்வொரு இருபது முறையும், நீங்கள் வசனத்தின் முடிவை அடையும்போது, ​​​​உங்கள் சிந்தனை முதல் வார்த்தையின் மீது இருக்கும். மேலும் வசனங்களுக்கு இடையேயான தொடர்பை உருவாக்கி, சொற்களை சரியாக ஒதுவதில் கவனம் செலுத்துங்கள்.
*மேலும் நீங்கள் பக்கத்தை முடிக்கும் வரை, ஒவ்வொரு வசனத்தையும் இருபது முறை படித்து அடுத்த வசனத்துடன் இணைக்கவும்.

5 - நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் பக்கத்தை மீண்டும் 20 முறை மீண்டும் படிக்கவும்.

6 - நீங்கள் மனப்பாடம் செய்த பக்கத்தைக் வேறொருவருக்கு ஓதி காட்டி கேட்க செய்யுங்கள் , அல்லது நீங்கள் மனப்பாடம் செய்த பக்கத்தின் ஆடியோ கிளிப்பைப் பதிவுசெய்து, உங்கள் தவறுகளை அறிய குர்ஆனைப் பார்த்து அதைக் கேளுங்கள்.

7-முடியுமாக இருந்தால் நீங்கள் மனப்பாடம் செய்த பக்கத்தை எழுதி, உங்கள் தவறுகளை அடையாளம் காணவும்.

8 - மிக அவசியமானது :- உங்கள் தொழுகைகளில் நீங்கள் மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுங்கள்
(கட்டாயமான தொழுகைகள், சுன்னத்தான தொழுகைகள், இரவுத் தொழுகைகள் போன்றவற்றில் ).

9 - ஒவ்வொரு புதிய பக்கத்தையும் நீங்கள் மனப்பாடம் செய்யும் போது, அதையும் முந்தைய பக்கத்தையும் 10 முறை மனப்பாடம் செய்து படிக்கவும்.

✅ இவ்வாறு செய்தால் உங்கள் குர்ஆன் மனப்பாடம் மிகவும் உறுதியாக இருக்கும், நீங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள், இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்...)

யாஅல்லாஹ் , சங்கையான குர்ஆனை எங்கள் இதயங்களின் வசந்தமாக ஆக்குவாயாக.

மனிதர்கள் அதிகம் கேட்கும் கேள்வி இது தான் 👇👇👇👇ஏழே கேள்வியால் மனிதனின் வாழ்க்கை முடிந்து போகிறது ஏழாவது கேள்விக்கு மட்டும...
12/12/2025

மனிதர்கள் அதிகம் கேட்கும் கேள்வி இது தான் 👇👇👇👇

ஏழே கேள்வியால் மனிதனின் வாழ்க்கை முடிந்து போகிறது ஏழாவது கேள்விக்கு மட்டும் அவனால் விடை அளிக்கமுடியாது.

🔴 இவ்வாறு தொழுகையில் நிற்காதீர் 👇~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~(கீழே படத்தில் காட்டப்பட்ட தவறான கால்நிறுத்தும் நிலையை குறிக்க...
12/12/2025

🔴 இவ்வாறு தொழுகையில் நிற்காதீர் 👇
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(கீழே படத்தில் காட்டப்பட்ட தவறான கால்நிறுத்தும் நிலையை குறிக்கிறது அவ்வாறு தொழுகையில் நிற்கக் கூடாது, அடுத்த படத்தில் கிப்லாவை நோக்கி நேராக காலை வைத்திருப்பது போன்று வைக்க வேண்டும்)

"இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு போலக் கிப்லாவை நேராக நோக்கி, முகம், மார்பு, கால்கள் அனைத்தும் முழுமையாக கிப்லா நோக்கி இருந்தபடி நிற்கும் ஒருவரையும் நான் பார்த்ததில்லை."

— இமாம் தாவூஸ் இப்னு கைய்சான் ரஹிமஹுமுல்லாஹ்

12/12/2025



ஃபஜ்ர் தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.

ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு,

நீங்கள் விரும்பினால் நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன் சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது.

(திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.

நூல் : ஸஹீஹ் புகாரி 648.

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக!

இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.

(அல்குர்ஆன் : 17:78)

12/12/2025

1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👌👇📢👊

👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்

2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.

👉 நகை
👉 பணம்
👉 சொத்து

3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.

👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்

4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.

👉 கடமை
👉 கன்னியம்
👉 கட்டுப்பாடு

5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.

👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்

6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.

👉 தாய்
👉 தந்தை
👉 இளமை

7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.

👉 தாய்
👉 தந்தை
👉 குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள் :

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Address

Ravanasamudram
Kadayam
627424

Website

Alerts

Be the first to know and let us send you an email when செய்யது பாதுஷா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category