கல்லை டைம்ஸ்

கல்லை டைம்ஸ் பொது தகவல்கள், பொழுதுபோக்கு செய்திகள், வேளாண்மை செய்திகள், நிகழ்வுகள்.

25/02/2025
25/02/2025
*_திருச்செந்தூரில் 24 தீர்த்தங்கள் : -_*இராமேஸ்வரத்தில் உள்ளது போல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி  24 த...
23/01/2025

*_திருச்செந்தூரில் 24 தீர்த்தங்கள் : -_*

இராமேஸ்வரத்தில் உள்ளது போல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி 24 தீர்த்தங்கள் உள்ளன.

அவைகளை தெறிந்து கொள்வோம் .

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.

இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

மற்ற தீர்த்தங்களின் பெயர்களை தெரிந்து கொள்வோம்.....

1. முகாரம்ப தீர்த்தம்.

2. தெய்வானை தீர்த்தம்.

3. வள்ளி தீர்த்தம்.

4. லட்சுமி தீர்த்தம்.

5. சித்தர் தீர்த்தம்.

6. திக்கு பாலகர் தீர்த்தம்.

7. காயத்ரீ தீர்த்தம்.

8. சாவித்ரி தீர்த்தம்.

9. சரஸ்வதி தீர்த்தம்.

10. அயிராவத தீர்த்தம்.

11. வயிரவ தீர்த்தம்.

12. துர்க்கை தீர்த்தம்.

13. ஞானதீர்த்தம்.

14. சத்திய தீர்த்தம்.

15. தரும தீர்த்தம்.

16. முனிவர் தீர்த்தம்.

17. தேவர் தீர்த்தம்.

18. பாவநாச தீர்த்தம்.

19. கந்தப்புட்கரணி தீர்த்தம்.

20. கங்கா தீர்த்தம்.

21. சேது தீர்த்தம்.

22. கந்தமாதன தீர்த்தம்.

23. மாதுரு தீர்த்தம்.

24. தென் புலத்தார் தீர்த்தம்.

மேற்படி தீர்த்தங்களில் ஒரு தரம் ஸ்நானம் செய்தால் இம்மை மறுமையும் சிறந்து விளங்கி செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.

கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது.

இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது. இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்.

🌷🌷

16/12/2024

*🔴🟡தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: வெளியானது அறிவிப்பு*

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ”சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதியும் சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1 மற்றும் 2ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 16ம் தேதி தொடங்கியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.,tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17ம் தேதி ஆகும். அதன் பிறகு ஜனவரி 19ம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஜனவரி 19 முதல் 21ம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Smart net,
Kallakurichi
9442225988

Address

காந்தி ரோடு கள்ளக்குறிச்சி
Kallakurichi
606202

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்லை டைம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category