Uyirtheeni

Uyirtheeni We are seving 100% Natural Product all over india and We are producing traditional food products fo

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐
14/04/2024

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐

முருகா ஏன் இந்த சோதனை இன்னும் மனம் ஏற்க மறுக்கிறது எங்கள் ஆசானை அதற்குள் அழைத்துக் கொண்டாயே அப்படி என்ன அவசரம் 😰😰😰
25/02/2024

முருகா ஏன் இந்த சோதனை இன்னும் மனம் ஏற்க மறுக்கிறது எங்கள் ஆசானை அதற்குள் அழைத்துக் கொண்டாயே அப்படி என்ன அவசரம் 😰😰😰

உயிர்தீனி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்உயிர்தீனி தனது பயணத்தை தொடங்கி 11 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக...
22/02/2024

உயிர்தீனி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உயிர்தீனி தனது பயணத்தை தொடங்கி 11 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அதற்கு பக்கபலமாக இருக்கும் இயற்கை அங்காடிகளுக்கும் மற்றும் நேரடி வாடிக்கையாளர்களுக்கும் நன்றியிணை தெரிவித்துக் கொள்கிறோம் பல சோதனைகளையும் பல இடர்பாடுகளையும் கடந்து வெற்றியோடு பயணிக்க எங்களின் வாடிக்கையாளராகிய நீங்களே காரணம் நாங்கள் ஒவ்வொரு முறை சோர்வடையும் போதும் எங்களின் பொருட்களை நீங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு கூறும் கருத்துக்களே எங்களுக்கு இன்னும் புதிய உற்சாகத்தை கொடுக்கிறது எனவே உயிர்தீனியில் வாங்கும் பொருட்கள் எவ்வாறு உள்ளது என்ற அனைவரின் கருத்துக்களை தெரிவித்தால் அது மேலும் நாங்கள் சிறப்பாக செயல்பட உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை இதற்கெல்லாம் தங்களுக்கும் தங்களை அறிமுகப்படுத்திய இந்தப் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏

நமது உயிர்தீனி யின் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்துக்களை தங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்

அனைவரும் நம் உயிர்தீனியின் இயற்கை உணவுப் பொருட்களை எளிமையாக வாங்கிட கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

உயிர்தீனியின் இயற்கை உணவுப் பொருட்கள் தயாரிப்பு முறை மற்றும் மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள உயிர்தீனியின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்

https://youtube.com/?si=7GL4UlyN1-kacIfy

Facebook :
https://www.facebook.com/profile.php?id=100057358453495&mibextid=ZbWKwL

உயிர் தீனிக்கென்று பிரத்தியேகமாக வாட்ஸாப் சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அதை ஃபாலோ செய்து ஆதரவு தாருங்கள்.
சேனல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

https://whatsapp.com/channel/0029VaI66JuEAKWJqfHNCT3B

தொடர்புக்கு

உயிர்தீனி இயற்கை பண்ணை
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

*உயிர்தீனி* யில் இன்று நாம் பார்க்க இருப்பது *வல்லாரை* *இட்லி* *பொடி* மற்றும் *வல்லாரை சூப்* மிக்ஸ் வல்லாரை கீரையில் இரு...
17/02/2024

*உயிர்தீனி* யில் இன்று நாம் பார்க்க இருப்பது *வல்லாரை* *இட்லி* *பொடி* மற்றும் *வல்லாரை சூப்* மிக்ஸ்

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் இந்த கீரை கொண்டுள்ளது.

வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. வல்லாரை கீரை உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்.

வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.


வல்லாரை கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.

அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரி செய்யும். பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.

வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும். இவ்வளவு நன்மைகள் உள்ள வல்லாரை கீரையை எளிதில் பயன்படுத்த நமது உயிர்தீனியில் வல்லாரை சாத பொடி & வல்லாரை சூப் மிக்ஸ் தயார் செய்துள்ளோம்.

அனைவரும் நம் உயிர்தீனியின் இயற்கை உணவுப் பொருட்களை எளிமையாக வாங்கிட கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

உயிர் தீனிக்கென்று பிரத்தியேகமாக வாட்ஸாப் சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அதை ஃபாலோ செய்து ஆதரவு தாருங்கள்

சேனல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

https://whatsapp.com/channel/0029VaI66JuEAKWJqfHNCT3B

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

*உயிர்தீனி* யில் இன்று நாம் பார்க்க இருப்பது *சிறுதானிய சப்பாத்தி & பூரி மிக்ஸ்*    தானியங்களில் சிறுவிதைகளைக் கொண்ட கம்...
13/02/2024

*உயிர்தீனி* யில் இன்று நாம் பார்க்க இருப்பது *சிறுதானிய சப்பாத்தி & பூரி மிக்ஸ்*


தானியங்களில் சிறுவிதைகளைக் கொண்ட கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவையே சிறுதானியங்கள். மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்டவை; மனிதர்களைப் பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டவை சிறு தானியங்களாகும். இது பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக இடம் பெறுவதோடு பல்வேறு நன்மைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. அந்தவகையில் ஊட்டச்சத்தில் பிரதான பங்கினையும் சிறு தானியங்களே வகிக்கின்றது.

சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை, சர்க்கரை நோய் டைப்-2, இதயப் பிரச்சனைகள், கொழுப்பை கட்டுப்படுத்துதல், கால்சியம் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல், புற்றுநோயை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை எளிதில் நிறைவேற்ற முடியும். சிறுதானியங்கள் மூலம் 15-20% நார்ச்சத்து நமக்கு கிடைக்கிறது.

இத்தனை நன்மைகள் கொண்ட சிறுதானியங்களை நாம் அனைவரும் எளிதில் பயன்படுத்த நமது உயிர் தீனியில் சிறுதானிய சப்பாத்தி & பூரி மிக்ஸ் தயார் செய்து கொண்டிருக்கிறோம்.

அனைவரும் நம் உயிர்தீனியின் இயற்கை உணவுப் பொருட்களை எளிமையாக வாங்கிட கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

உயிர் தீனிக்கென்று பிரத்தியேகமாக வாட்ஸாப் சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அதை ஃபாலோ செய்து ஆதரவு தாருங்கள்

சேனல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

https://whatsapp.com/channel/0029VaI66JuEAKWJqfHNCT3B

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

*உயிர்தீனி* ல் இன்று நாம் பார்க்க இருப்பது *பனை கருப்பட்டி* கருப்பட்டியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்...!!காபியில் சர...
02/02/2024

*உயிர்தீனி* ல் இன்று நாம் பார்க்க இருப்பது *பனை கருப்பட்டி*

கருப்பட்டியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்...!!

காபியில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

ஓமத்தை பனங்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனி கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

பழங்காலத்தில் எல்லாம் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். மேலும் கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். கருப்பட்டி அடர்ந்த நிறத்தில் இருக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.

கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைடிரேட் நிறைந்துள்ளது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது.

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும்.ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவர் தினமும் கருப்பட்டியை உட்கொண்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம்.கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.

காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன. கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம்.


கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடையச் செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது. *இத்தகைய நன்மைகள் உள்ள பனை கருப்பட்டி நமது உயிர்தீனியில் கிடைக்கும்.*

எளிதாக நமது உயிர்தீனி யின் தயாரிப்புகளை வாங்கிட கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

உயிர் தீனிக்கென்று பிரத்தியேகமாக வாட்ஸாப் சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அதை ஃபாலோ செய்து ஆதரவு தாருங்கள்

சேனல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

https://whatsapp.com/channel/0029VaI66JuEAKWJqfHNCT3B

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

உயிர்தீனி யில் இன்று நாம் பார்க்க இருப்பது *தினை லட்டு*தினை அரிசியில் உள்ள சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் !!தினை அரிசி...
29/01/2024

உயிர்தீனி யில் இன்று நாம் பார்க்க இருப்பது *தினை லட்டு*

தினை அரிசியில் உள்ள சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் !!

தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து,!! ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தினை அரிசியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்.

கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.

தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும்.

தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது.

எளிதாக நமது உயிர்தீனி யின் தயாரிப்புகளை வாங்கிட கீழே உள்ளா லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  நமது உயிர்தீனி ன் சார்பாக அன்...
26/01/2024

நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நமது உயிர்தீனி ன் சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது

உயிர்தீனி யில் இன்று நாம் பார்க்க இருப்பது தேங்காய் மிட்டாய்  *தேங்காய் மிட்டாய்-ன் வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்* இன...
22/01/2024

உயிர்தீனி யில் இன்று நாம் பார்க்க இருப்பது தேங்காய் மிட்டாய்
*தேங்காய் மிட்டாய்-ன்
வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்*

இன்றளவும் தேங்காய் என்றதும் பலரது நாவில் தேங்காய் பருப்பி எனப்படும் தேங்காய் மிட்டாய் தான் நினைவில் வரும் அத்தகைய தேங்காய் மிட்டாய் சுவையானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அமையும் வகையில் இருந்தால் தேங்காய் பிரியர்களுக்கு இது அமிர்தமாகத்தான் விளங்கும்.

தேங்காய் மிட்டாய் உருவாகும் விதம்
சுத்தமான தரம் உயர்ந்த தேங்காயை நன்றாக அரைத்து அதிலிருந்து தேங்காய் மிட்டாய் உருவாக்கப்படுகிறது.

தேங்காயில் உள்ள இயற்கை சத்துக்கள்
தேங்காயில் காப்ரிக் ஆசிட் மற்றும் லாரிக் ஆசிட் மற்றும் ஃபேட்டி ஆசிட் போன்ற நவீன வகையான ஆசிட் வகைகள் உள்ளன .மேலும் வைட்டமின் சி , பி காம்ப்ளெக்ஸ் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, புரதச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன.

தேங்காய் மிட்டாய் மருத்துவ பயன்கள்
பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் பிரச்சினைகளிலிருந்து இது தீர்வு தருகிறது.
தேங்காய் மிட்டாய் உண்பதன் மூலமாக தோல் வியாதிகள் விரைவில் குனமடைகிறது.
தேங்காயில் உள்ள இயற்கை சத்துக்கள்
துரித உணவுகளால் சிலநேரம் அஜீரண கோளாறு ஏற்படும்போது இந்த தேங்காய் மிட்டாயை உட்கொள்ளுவதால் உடனே அஜீரண பிரச்சினையானது தீர்க்கப்படுகிறது.
இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யும் பணியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த தேங்காய் மிட்டாய் குழந்தைகள் உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
விரைவில் முதுமை ஏற்படுவதை தடுப்பதோடு மட்டுமின்றி தைராய்டு பிரச்சினைகளையும் விரைவில் சரி செய்கிறது.
இதை யார் யாரெல்லாம் உட்கொள்ளலாம் ?
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வரம்பின்றி உட்கொள்ளலாம்.

அளவோடு உட்கொள்ளுதல் நலம்!

எளிதாக நமது உயிர்தீனி யின் தயாரிப்புகளை வாங்கிட கீழே உள்ளா லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

உயிர்தீனி யில் இன்று நாம் பார்க்க இருப்பது கருப்பு  உளுந்தங்கஞ்சி மிக்ஸ் பருவ வயது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பரு...
14/01/2024

உயிர்தீனி யில் இன்று நாம் பார்க்க இருப்பது கருப்பு உளுந்தங்கஞ்சி மிக்ஸ்

பருவ வயது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பருவம் பூப்படையும் காலமாகும். இக்காலத்தில் பெண்களின் கருப்பை பலம் பெறும் வகையிலான உணவுகளை சாப்பிட வேண்டும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து சாப்பிடக் கொடுத்து வருவதால் அவர்களின் கருப்பை வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.

உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.


கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து, உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.

கருப்பு உளுந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது. எனவே இந்த உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவை குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

எளிதாக நமது உயிர்தீனி யின் தயாரிப்புகளை வாங்கிட கீழே உள்ளா லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

நிலக்கடலையில் செய்யப்படும் "உயிர்தீனியின் " கருப்பட்டி கடலை மிட்டாய் மிகவும் பிரசித்தம் பெற்றது.கருப்பட்டி கடலைமிட்டாயின...
11/01/2024

நிலக்கடலையில் செய்யப்படும் "உயிர்தீனியின் " கருப்பட்டி கடலை மிட்டாய் மிகவும் பிரசித்தம் பெற்றது.

கருப்பட்டி கடலைமிட்டாயின் நன்மைகள்

கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்

எலும்புகள்

நமது உடலில் அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகளாகும். வயது ஏற ஏற எலும்புகள் வலிமை குறைவதை தடுக்க முடியாது. கருப்பட்டி கால்சியம் மற்றும் தாது சத்துகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்

தோல் பளபளப்பு

நமது உடலை போர்வை போல் மூடி இருக்கும் தோல் உடலை வெளிப்புற வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. வயதாகும்போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது. கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது

நிலக்கடலை

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. இது மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று அழைக்கப்படுகிறது.

எனவே நாம் கருப்பட்டி மற்றும் நிலக்கடலையை கொண்டு தயார் செய்த கருப்பட்டி கடலைமிட்டாய் உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!

எளிதாக நமது உயிர்தீனி யின் தயாரிப்புகளை வாங்கிட கீழே உள்ளா லிங்கினை பயன்படுத்தவும்

https://wa.me/c/918825522835

தொடர்புக்கு

உயிர்தீனி
நலம் அக்ரோ ஃபுட்ஸ்
காங்கேயம்
9842648426
7373734696

உயிர்தீனி 'யின் உறவுகள் அனைவருக்கும் இனிய  ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மற்றும்  ஒரு நற்செய்தி இதுவரை நமது உயிர் த...
31/12/2023

உயிர்தீனி 'யின் உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மற்றும் ஒரு நற்செய்தி இதுவரை நமது உயிர் தீனியின் தயாரிப்புகள் அனைத்தும் ஆட்கள் பற்றாக்குறையால் மிகவும் தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது தற்பொழுது அது சரி செய்யப்பட்டு தாங்கள் ஆர்டர் கொடுத்ததில் இருந்து மூன்று நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது உயிர் தீனியின் சிறப்பு அம்சம் எந்த பொருட்களும் தயார் நிலையில் இருக்காது தாங்கள் ஆர்டர் கொடுத்த பின்பு அந்தப் பொருட்களை தயார் செய்கிறோம் (இனிப்பு மற்றும் கார வகைகள் மட்டும்) அதன் காரணமாகவே தங்களின் ஆர்டர்களை அனுப்ப மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறோம். உயிர் தீனியின் தயாரிப்பு பொருட்களை நீங்கள் சுலபமாக பெற்றிட கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தி ஆர்டர் செய்யவும்.
https://wa.me/c/918825522835
நமது உயிர் தீனியின் தயாரிப்புகளை எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து பார்வையிடலாம்.

மேலும் விவரங்களுக்கு

உயிர்தீனி - இயற்கை தயாரிப்புகள் ,
38, இச்சிக்காட்டுவலசு,
நத்தக்காடையூர் வழி,
காங்கயம்,
திருப்பூர் - 638108.
9842648426
7373734696

Address

38, Ichhikattu Valasu, Nathakkadaiyur

638108

Alerts

Be the first to know and let us send you an email when Uyirtheeni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uyirtheeni:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share