Akani Organic Farms

Akani Organic Farms 🌿 Certified Organic & Regenerative Farmer
🌾Holistic food, natural health care & farm-crafted cosmetics
📦 Shop direct → www.akanifarms.in

மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம்.நமது பண்ணையின் உழைப்பாளர்களில் 90 சதவிகிதம் பெண்கள் என்பதில் பெருமை கொள்கிறது அகணி பண்ணை....
08/03/2026

மார்ச் 8.
சர்வதேச மகளிர் தினம்.

நமது பண்ணையின் உழைப்பாளர்களில் 90 சதவிகிதம் பெண்கள் என்பதில் பெருமை கொள்கிறது அகணி பண்ணை.

விதைப்பது முதல் உழுது அறுவடை வரை இங்கு அனைத்துச் செயல்பாடுகளும் பெண்களாலேயே நடைபெறுகின்றன. அதுமட்டுமல்ல. அகணி பண்ணையின் கட்டுமானங்களாகட்டும் பனைமரம் ஏறி தோகை அறுத்து, மிதித்துப் பதப்படுத்தி கூரை வேய்வதாகட்டும், தாயற்ற குஞ்சுகளுக்கு கோழிகள் ஆவதாகட்டும், நள்ளிரவில் ஈனும் பசுக்களுக்கு தாதியாவதாகட்டும், வெளியே சென்று விடம் (விஷம்) தின்று தள்ளாடியபடி வீடு திரும்பும் நாய்களுக்கு பம்பரமாய் சுழன்று முதலுதவி செய்து காப்பாற்றுவதாகட்டும் - இவர்களால் செய்யப்படாத வேலைகள் என்றெதுவுமில்லை.

அகணி பண்ணையைக் காத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் இவர்கள், பத்து கைகள் கொண்ட காளிகள்!. ஆம். இவர்களே தச்சர்-கொத்தனார்-பொறிஞர்- கலைஞர் மற்றும் ஆண்கள். இவர்களால் முடியாதது எதுவுமில்லை.

அதேசமயம் அகணி,

- தனது செயல்பாடுகளில் பெண்களை மையப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான பொருளாதார அதிகாரத்தை உருவாக்க உதவுகிறது.

- பல்வேறு நுட்பங்கள் பயிற்சிகள் மற்றும் திறமைகளை வளர்ப்பதன் மூலம் தன்னம்பிக்கையாளர்களாக மாற்றுகிறது.

- தாங்குறு (Sustainable) வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் வளமான எதிர்காலத்திற்கு வித்திடுகிறது.

- படைப்பு மற்றும் கலைத்திறன்களை ஊக்குவிப்பதன்வழி ஆரோக்கியமான மனநிலையைப் பேணுகிறது.

இந்நாளில், சற்றேனும் பொருளாதார சுதந்திரத்தைச் சுவாசித்தபடி, நிமிர்ந்திருக்கும் உள்ளூர் கிராமத்துப் பெண்களின் மண் படிந்த கரங்களைப் பற்றி, நன்றியுடன் நினைவு கூர்கிறது அகணி பண்ணை.

March 8
International Women's Day

At Akani Farm, we take immense pride that 90% of our workforce consists of women. Today, we celebrate these extraordinary guardians of our land!

From sowing seeds to plowing fields to harvesting crops—every operation here is managed by women. But that's not all. Whether it's constructing our farm buildings, climbing palm trees to cut and process thatch for roofing, caring for orphaned chicks, acting as midwives for cows giving birth in the middle of the night, or rushing to provide first aid to our dogs who return home disoriented after consuming poison—there's nothing these women cannot accomplish.

These fierce protectors of Akani Farm are truly like the goddess Kali with her ten hands! They are carpenters, masons, engineers, artists, and more all rolled into one. Nothing is impossible for them.

At the same time, Akani Farm:

- Empowers women economically by centering them in all our operations

- Transforms them into confident individuals through various skill-building techniques and training

- Plants seeds for a prosperous future by engaging women in sustainable agriculture and food security

- Nurtures mental well-being by encouraging creativity and artistic talents

On this special day, with heartfelt gratitude, we remember the soil-stained hands of the local village women who stand tall, breathing at least a small measure of economic freedom.

18/02/2026

அகணி பண்ணையில் சுதந்திரமாக திரியும் ஒரு கோழி தனது குஞ்சுகளுடன் ஓய்வெடுக்கிறது.

(ஏழு கழுதை வயசு ஆயிடுச்சு. இன்னும் குஞ்சுகெல்லாம் அம்மாவோடய திரியுதுங்க... )

குஞ்சுகளை பொரிக்க மின்சாரம் தேவையில்லை.

அசுர வளர்ச்சியை துரிதப்படுத்தும் உணவுகளோ மருந்துகளோ இல்லை.

பெரிய பண்ணைகளில் வளர்ப்பதைப் போன்ற குறுக்கு வழிகள் இல்லை.

அடைப்பதற்கும் திறப்பதற்கு ஆட்கள் தேவை இல்லை.

அனைத்தும் உயிரினங்களும் உள்ளுணர்வாலேயே (instinct).
செயல்படுகின்றன.

இதுவே இயற்கையின் வழியிலான உயிரினச்செயல்முறை.

அகணி பண்ணையில், உணவுகளும் உயிர்களும் இயற்கையோடு இயைந்தே உருவாகின்றன . இயற்கைக்கு எதிராக அல்ல .

--

At Akani Farms, a free-ranging hen rests with her chicks.

Three months old — and they still move with their mother.

No hatchery units.
No artificial brooders.
No growth-accelerating feed.
No chemical performance enhancers.
No confinement schedules.
No opening and closing of cages.

In industrial systems, production efficiency defines life.

Here, instinct defines life.

The hen hatches.
The hen leads.
The chicks learn by following.

Growth is paced by biology — not by market timelines.

This is not controlled farming.
This is ecological farming.

At Akani Farms, food and animals emerge in alignment with nature — not engineered against it.

தென்னை நடவு — நீர் மேலாண்மையின் பலன்வறண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீரின் அருமை எங்களுக்கு நன்கு தெர...
15/02/2026

தென்னை நடவு — நீர் மேலாண்மையின் பலன்

வறண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீரின் அருமை எங்களுக்கு நன்கு தெரியும்.

அதனால் தான் பண்ணையின் ஆரம்ப காலங்களிலேயே
சொந்தப் பயன்பாட்டிற்காக பத்து தென்னை மரங்கள் மட்டும் நடவு செய்து வளர்த்தோம். அவற்றின் பலன்களை இன்று அனுபவித்து வருகிறோம்.

ஆனால் அது சுலபமான பயணம் அல்ல.

பண்ணையின் ஆரம்ப கட்டத்தில்
நீர் மேலாண்மையின் ஒரு முக்கிய பகுதியாக Water Recharging செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Swale எனப்படும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. மழைநீர் ஓடிச் செல்லாமல் அதிலேயே தங்கி நிலத்தடியில் செழிக்கச் செய்யப்பட்டது.

இதற்காக ஆரம்பத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டது. அப்போது சுற்றியிருந்த பலர் இதை நகையாடினர். “பைத்தியக்காரத்தனம்” என்றனர்.

ஆனால் காலம் சென்றது.
இயற்கை தன் வேலையை தானே செய்தது.

இன்று —
அகணி பண்ணை, நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்றுள்ளது.

உபரி நீர் இருப்பதால்
மேலும் 180 தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

எங்களது மதிப்பு கூட்டு பொருட்களுக்கு தேங்காய் எண்ணெய் தேவையாகிறது. அதற்கான மூலத்தை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நிலத்தடி நீரை வளப்படுத்த
நேற்று மேற்கொண்ட ஆழமான முயற்சிகள் இன்று பலன் தருகின்றன.

இயற்கை ஒருபோதும் தவறுவதில்லை.

--

Coconut Planting — The Result of Water Management.

Coming from drought-prone Sivagangai district, we understand the value of water.

That is why, during the early years of the farm, we planted ten coconut trees for our own use and have been enjoying their yield.

But the journey was not easy.

In the foundational phase of the farm,
water management was treated as a priority.

Water recharging systems were implemented. Swales were constructed to slow down rainwater runoff and allow it to percolate into the soil.

It required significant early investment.
At that time, many around us mocked the effort.
Some called it impractical.

But time passed.
Nature did its work.

Today, Akani Farms has achieved water self-sufficiency through consistent regenerative water management.

With surplus water availability, additional 180 coconut saplings have now been planted.

Our value-added products require coconut oil.
We are building our own source.

The intensive groundwater recharge efforts
undertaken yesterday are delivering results today.

Nature does not fail.

குல தெய்வத்திற்கு நேர்ந்த விடப்பட்ட அகணியின் இரண்டு காளைகள் - கள்ளச்சியும், கருப்பனும்.
16/01/2026

குல தெய்வத்திற்கு நேர்ந்த விடப்பட்ட அகணியின் இரண்டு காளைகள் - கள்ளச்சியும், கருப்பனும்.

16/01/2026

திருவள்ளுவர் தின வாழ்த்து!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
​(குறள் 322 - அதிகாரம்: கொல்லாமை)

​பொருள்: கிடைத்ததைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, அறநூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும்.

, , , , , , , , , , , ,

Happy Pongal!
15/01/2026

Happy Pongal!

01/01/2026
Merry Christmas!
25/12/2025

Merry Christmas!

இனிப்பான செய்தி!Every drop of Akani Farms Certified Organic Honey is harvested with care from our bee-friendly, regenera...
11/11/2025

இனிப்பான செய்தி!

Every drop of Akani Farms Certified Organic Honey is harvested with care from our bee-friendly, regenerative farm. 🌸

No heating. No blending. No shortcuts. Only the authentic taste of nature and the hard work of our bees.

✨ Choose Raw. Choose Certified. Choose Akani Farms.

🌿 Certified Organic | Regenerative Farm Origin

The farm is my constant teacher. Daily lessons in dirt, resilience, and growth. 🌾Go outside and learn something.www.akan...
05/10/2025

The farm is my constant teacher. Daily lessons in dirt, resilience, and growth. 🌾

Go outside and learn something.

www.akanifarms.in
Farm crafted wellness products.

Healing Rooted in the Soil: Why Our Green Oil is Truly SwadeshiIn a world full of chemical compounds, we choose the path...
02/10/2025

Healing Rooted in the Soil: Why Our Green Oil is Truly Swadeshi

In a world full of chemical compounds, we choose the path of simplicity and self-reliance, a philosophy deeply inspired by Mahatma Gandhi's teachings.

Our Green Oil is a true Swadeshi product, born from local knowledge and the dedicated hands of our farming community. This isn't mass production; it's a careful, mindful process:
Natural & Swadeshi Wound Healing Oil. Handcrafted by Farmers.

Every bottle is a pledge to:
* Support Local Economy: Directly empowering the farmers who cultivate the ingredients.
* Ensure Purity: Guaranteeing an all-natural remedy, free from harsh chemicals.
* Practice Ahimsa: Offering your body gentle, non-violent healing that respects the environment.

Choosing this oil is a small, powerful step toward conscious consumerism. Join us in embracing local wisdom, natural purity, and ethical healing.

Ready to embrace Swadeshi healing? Click here to learn more about the farmers behind our oil and order your bottle today!

Green Oil for Wound Healing – AKANI FARMS https://akanifarms.in/products/green-oil

More than just healing, it's a philosophy. 🌿✨Our Green Oil is a testament to the power of Swadeshi and living in harmony...
02/10/2025

More than just healing, it's a philosophy. 🌿✨

Our Green Oil is a testament to the power of Swadeshi and living in harmony with nature. We believe the purest remedies come from the purest sources.

That’s why our oil is:
Natural & Swadeshi Wound Healing Oil. Handcrafted by Farmers.
It's an act of Ahimsa (non-violence) toward your body and the Earth—gentle, effective, and deeply ethical. When you choose our Green Oil, you're not just buying a product; you're supporting local hands and a timeless way of healing.

Address

S. No. 232/10 Vetriyur Village
Karaikudi
630321

Alerts

Be the first to know and let us send you an email when Akani Organic Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share