Iyarkai Karangal

Iyarkai Karangal Palm Jaggery chocolate manufacturing & sales 9487624149 கருப்பட்டி (பனைவெல்லம்) தயாரிப்பு மற்றும் நேரடி விற்பனை

21/08/2026

பனைத்தேன் | இயற்கை கரங்களுடன் 🌴🍯

பனை மரத்தின் இயற்கை இனிப்பு – பனைத்தேன்!

செயற்கை இனிப்புகள் இல்லாமல், இயற்கையாக கிடைக்கும் சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு.

✅ இயற்கையான இனிப்பு
✅ உடலுக்கு புத்துணர்ச்சி தரும்
✅ பாரம்பரிய சுவை மற்றும் ஆரோக்கியம்

பனைத்தேனின் உண்மையான சுவையை அனுபவிக்குங்கள்!

🌿 இயற்கை கரங்களுடன் 🌿

#பனைத்தேன் #இயற்கைகரங்கள்

19/08/2026

இயற்கையாக கிடைக்கக்கூடிய கள்ளின் மருத்துவப் பயன்கள் என்ன தெரியுமா.

தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.



பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பாலை100-200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

14/08/2026

பனை மரத்தின் பயன்கள் என்ன?
பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என்ன? என்று முழுமையாக பார்க்கலாம் வாங்க

பனை மரங்களை வளர்க்க யாருக்காவது ஆர்வமாக இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் தரமான பனைவிதைள் கிடைக்கும்.
இயற்கை கரங்கள் 9487624149
https://wa.me/c/919487624149

பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. விழாவிற்கும் (திருமணம் -தாலி மற்றும் காதணி), ஓலைச்சுவடி, இனிப்புக்கும், மர வேலை, நாட்டு மருந்து ஆகிய பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய அறிய மரம் பனை. 30 வருடத்திர்கு முன் இந்தியாவில் தோராயமாக 9 கோடி பனை மரம் அதில் 6 கோடி தமிழ் நாட்டில் இருந்தனவாம். முன்னனியில் இருந்த நம் மாநிலம் தற்போது ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலத்திர்கு பின் சென்று விட்டோம். ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி மத்தூர், பட்டுகோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, பரமக்குடி, காரைக்குடி, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கலாம்.

ஆனால் தற்பொழுகு அறிதாகி வருகிறது. இவை சிறந்த உயிர் வேலி ஏன் யானை கூட உள்ளே நுழைய முடியாது. ஆடு மாடு மேயாமல் ஒரளவு நீர் வசதியுள்ள நிலப்பரப்பில் 8 வருடங்களில் பலன் தரக்கூடியது. மேலும் வற்டசியை தாங்கி வளரக் கூடியது. மணலும் களிபாங்கு உள்ள கடற்கரைக்கு கூட ஏற்றது. தென்னை சாகுபடி பிற்கால மரபு பயிர் ஆனால் பனை சங்க காலம் முதல் தமிழ் நாட்டில் தோன்றிய மரம்.

பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன என்று சொல்லப்படுகிறது. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.

மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.

கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.
பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப் பெற்றது ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறும் பனை ஓலையால்தான். திருவள்ளுவர் என்றதும் நம் நினைவில் தோன்றுவது ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஏந்திய திருவள்ளுவரைத்தான்.

பனையின் சிறப்பம்சங்கள்:

https://wa.me/c/919487624149

சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல் பொருள்கள் பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும்.

தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருள்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும்கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.

மின்சார வரவுக்கு முன்னால் வெயில் காலங்களில் பனை விசிறிக்கு நமக்கு பெரிதும் உதவின. நிறைய விளையாட்டு பொருள்கள் செய்ய பனை பயன்படுகிறது. பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு.

• தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.

முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்சத்துக்கள். தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதனீர் ஒரு சிறந்த குளிர்ச்சிபானமாகும். பதனீரைக் காய்ச்சி பனைவெல்லம் (கருப்பட்டி) செய்யப்படுகிறது. பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்.

பனையின் பயன்கள்:

இயற்கை கரங்கள் 9487624149
https://wa.me/c/919487624149
பனைவிதைள் கிடைக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

• பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன.

• பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன.

• ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.

• பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன.

• பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன.

• ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.

• பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வான்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது.

• பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன. பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு.

• ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.

• "இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.

• ஒரு பனை உயிர்நீத்து தலை வீழ்ந்த போதிலும் பனையின் பட்டுப்போன மரப்பகுதி பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால் பல பறவைகள் ஓர் மாடி வீட்டில் வசிப்பது போல கூட்டமாக வாழ்கின்றன.

• தற்போது அருகி வரும் உயிரினங்களான பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்பு, மரநாய் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைதான்.

மருத்துவப் பயன்கள்:

இயற்கை கரங்கள் 9487624149
https://wa.me/c/919487624149
பனைவிதைள் கிடைக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

• பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

• பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.
வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

• புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

• நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

• பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

• பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

• பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

• பனையோலை வேய்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது.

• இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம்.

• இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதை பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

பயன்தரும் பாகங்கள்:

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

பதநீர்:

பனை மரத்தில் நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவார்கள்.
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.

பனை மரங்களை வளர்க்க யாருக்காவது ஆர்வமாக இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் தரமான பனைவிதைள் கிடைக்கும்.
இயற்கை கரங்கள் 9487624149
https://wa.me/c/919487624149

05/08/2026

பனைமரத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

பனை மரத்தின் சிறிய வரலாறு:

பனைமரம் 108 நாடுகளில் வளர்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 30 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்பொழுது வெகுவாக அளிக்கப்பட்டு வருகிறது😟. பனையை பருவப்பனை(பெண்பனை) மற்றும் அழகுப்பனை(ஆண்பனை)என்று கூறலாம். பனை 10 ஆண்டுகளுக்கு⏳ பின்னரே 15m வளரும். வளர்ந்த பின்னரே ஆண்பனை, பெண்பனை வேறுபடுத்த முடியும். பனைமரம் சுமார் 30m🌴 நீளம் வளரும். இதன் இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் நீளமாக இருக்கும். பனை மரம் தண்ணீர் இல்லாமலே பழம் தருகிறது. பனைமரத்தின் பயன்களை ரசிக்கலாம் வாருங்கள்😋!

1000 தென்னை சாய்ந்தாலும் ஒரு பனை சாய ஒரு வாரம் புயல்🌊 அடிக்க வேண்டும்.

பனை ஓலை:

பனைமரம் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்😯. அதில் இருந்து கிடைக்கும் பயன்கள் ஏராளம். அதில் ஒன்று பனை ஓலை. பனை ஓலையில் அழகிய கைவினை பொருள்கள்🎁, வீட்டு உபயோக பொருள்கள், பனை விசிறி, பனை ஓலையை வைத்து கலைப்பொருள்கள் செய்து சிலர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆகவே, பனைமரம் பலருக்கு வாழ்வாதாரமாகவும்👔 இருக்கிறது.

பனங்கற்கண்டு:

பனைமரத்திலிருந்து நுங்கு, கள்🍺, பனங்கிழங்கு கிடைக்கிறது. பனைவெல்லத்தில் இருந்து கிடைக்கும் “பனங்கற்கண்டு” இனிப்பு😋 சுவையை கொண்டது. பனங்கற்கண்டை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம். வாய்துர்நாற்றம்😤, உடல்சத்து💪🏻, தொண்டைக்கட்டு, ஞாபகசக்தி🤔, நோய் எதிர்ப்பு, உடல் வெப்பத்தை சமமாக்குதல் போன்ற பல பயன்களை கொடுக்கிறது. கர்ப்பிணிபெண்கள்🤰 சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக🧘‍♂️ இருக்கும்.

கருப்பட்டி, வெல்லம்:

டீ, காப்பி☕ பிரியர்கள் இந்த உலகில் ஏராளம். அதில் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் கருப்பட்டி வெல்லம் உபயோகிக்கலாம். அப்படி அருந்தி வருவதால் நன்மைகள் பல. பனை வெல்லத்தில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது. பனைவெல்லத்தில் வெள்ளை சர்க்கரையை விட 60 மடங்கு கனிமங்கள் இருக்கிறது.

மலசிக்கல், உடல் எடை குறைப்பு, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றுதலுக்கு உதவும். மற்றும் குடல், உணவுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றை சுத்தம்👌 செய்ய உறுதுணையாய் உள்ளது.

பனங்கள்ளு:

பனை மரத்தின் கீழே பாலை🥛 குடித்தாலும் பார்ப்பவர்களுக்கு கள்🍻 தான்.

பழமொழி

பனங்கள்ளு மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆண்களுக்கு உடல்🏋️ வலிமையையும், விந்து சக்தியையும் அதிகரிக்க செய்யும். பனைமரத்தின் பாலை தெளுவு என்று கூறலாம். பனை பாளையை வெட்டி பால் போன்ற திரவம் படியும் அதை மண்பானைகளில் சேமிப்பார்கள். கள் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். கள் அருந்தினால் உடலுக்கு நல்லது மட்டுமல்லாமல் மயக்கம்💫 தரும். கள்ளை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். தமிழ்நாட்டில் கள் விற்பனை தடை🚫 செய்யப்பட்டுள்ளது. அதனால் தென்னங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பனங்கிழங்கு:

பனங்கிழங்கு மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. இதை வேகவைத்து துண்டுகளாக்கி சாப்பிடலாம். பனங்கிழங்கு சாப்பிடும் முறை பற்றி பார்க்கலாம்.

• வேகவைத்து அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இரும்பு சத்து கூடும்.

• பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால்🥥 சேர்த்து சாப்பிட்டால் உடல் பலம்💪 பெரும். பெண்களுக்கு கர்பப்பை வலுவடையும்.

• இது வாயு தொல்லை உடையது. எனவே பனங்கிழங்குடன் உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டு வரலாம். இனிப்பு பிரியர்கள் கருப்பட்டி சேர்க்கலாம்.

• பனங்கிழங்கு நார் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒற்றை தலை வலி உள்ளவர்கள் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

நுங்கில் மறைந்துள்ள அதிசயங்கள் என்னவென்று தெரியுமா🤔?

பனையேற்றம்(மரமேறுதல்):

பனையேற்றம் என்பது மரமேறுதல். பனையேற்றம் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ராமநாதபுரம், நெல்லை, தூத்தூக்குடி மற்றும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மற்றும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தர்மபுரி பகுதிகளில் பனையேற்றம் நிகழும். பனைமரம் ஏறுவது பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் என பல திறன்களை உள்ளடக்கிய தொழில். பனைமரம் ஏறுவதன் மூலம் ஆண்களுக்கு உடல் மிக வலுவாகவும்💪 ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பனைமரம் எங்கு உள்ளது?

தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேல் பனை மரங்கள் உள்ளது. அதில் 50 சதவீதம் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் சென்னை, நாமக்கல், சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20 சதவிகித பனை மரங்களும் உள்ளன.

பனைத்தொழில்:

பனைமரம் ஆரோக்கியதிக்கு மட்டுமில்லாமல் பலரின் வாழ்வாதாரமாக இருக்கிறது. பனைமரத்திலிருந்து வரும் பனைஓலைகளை வைத்து கலைப்பொருள்கள், நார் பெட்டி, ஓலை பெட்டி, சிலம்பு கம்பம், கல்யாண பாய்கள், இடியாப்பம் தட்டு, வித விதமான கூடைகள், விசிறி, தொப்பி ஆகிய பொருள்களை சில மக்கள் கைத்தொழிலாக செய்து வருகின்றனர்.

நம் முன்னோர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன் அளித்து பழமை நிறைந்த பாரம்பரியம் மிக்க அனைவராலும் மறக்கப்பட்ட பனைமரத்தின் பெருமையை அனைவர்க்கும் பகிர்வோம்

02/08/2026

கருப்பட்டியின் நன்மைகளைப பற்றி DeepSeek யிடம் விவரம் கேட்டேன் அது கொடுத்த பதில்

**கருப்பட்டியின் நன்மைகள் - விரிவான தகவல்கள்**

**1. ஊட்டச்சத்து மதிப்பு:**
கருப்பட்டி (பனை வெல்லம்) என்பது பனை மரத்தின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பு. இது சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை விட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுப்பொருட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் B காம்ப்ளெக்ஸ் சிறிதளவு உள்ளது.

**2. உடல் ஆரோக்கிய நன்மைகள்:**
- **செரிமானத்திற்கு நல்லது:** கருப்பட்டி செரிமான ரசாயனங்களைத் தூண்டி, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.
- **ஆற்றல் மிகுந்தது:** சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால், ஆற்றலை படிப்படியாக வெளியிடும். இது சோர்வைத் தடுக்கும்.
- **இரத்த சுத்திகரிப்பு:** இரும்பு சத்து ஹீமோகுளோபினை அதிகரித்து, இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இரத்த சோகை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
- **எலும்பு ஆரோக்கியம்:** கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றன.
- **நோயெதிர்ப்பு சக்தி:** ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.

**3. மருத்துவ பயன்கள்:**
- **சுவாச பிரச்சினைகள்:** இது குளிர், இருமல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவும். இஞ்சி அல்லது மிளகுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
- **கல்லீரல் சுத்திகரிப்பு:** உடலில் இருந்து விஷப்பொருட்களை அகற்ற கல்லீரலுக்கு உதவுகிறது.
- **தோல் ஆரோக்கியம்:** இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம், பரு மற்றும் எரிச்சல் போன்ற தோல் பிரச்சினைகளை குறைக்கிறது.

**4. மாதவிடாய் பிரச்சினைகள்:**
கருப்பட்டி உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.

**5. எடை கட்டுப்பாடு:**
சர்க்கரையை விட குறைந்த கலோரிகள் மற்றும் இயற்கை இனிப்பு என்பதால், மிதமான அளவு பயன்படுத்தினால் எடை கட்டுப்பாட்டுக்கு உதவும்.

**6. முன்னெச்சரிக்கைகள்:**
- **சர்க்கரை நோய்:** குளைகோசு குறியீட்டு எண் குறைவாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.
- **அதிகப்படியான நுகர்வு:** எடை அதிகரிப்பு அல்லது இரத்த சர்க்கரை அளவு உயரும் வாய்ப்பு உள்ளது.
- **தரம்:** சுத்தமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி கெட்டுப்போகலாம். நம்பகமான மூலத்திலிருந்து வாங்க வேண்டும்.

**7. பாரம்பரிய பயன்பாடுகள்:**
சமையலில் இனிப்பாகவும், மருந்துகளில் சேர்ப்பானாகவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, "பனங்கற்கண்டு" என்பது பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

**முடிவு:**
கருப்பட்டி என்பது சர்க்கரையை விட ஆரோக்கியமான மாற்றாகும். ஆனால், அளவோடு பயன்படுத்தினால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும். பாரம்பரிய நம்பிக்கைகள் இருந்தபோதிலும், சில நன்மைகளுக்கு அறிவியல் ஆதாரங்கள் தேவை.

Address

Bargur
Krishnagiri
635104

Alerts

Be the first to know and let us send you an email when Iyarkai Karangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iyarkai Karangal:

Shortcuts

Share