Ainthunai natural farmers

Ainthunai natural farmers முயற்சி என்பது விதை போல அதை விதைத்து ?

12/08/2025
12/08/2025

*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெறக் கோரியும்* -

*மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை தமிழ்நாட்டில் பயிரிட அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு அறிவிக்க கோரியும்*

ஒரு நாள் அடையாள *உண்ணாவிரத போராட்டம்*
—---------------------------------------------------------------------------------------------------------
*நாள்- 22-08-2025* (வெள்ளிக்கிழமை).
*நேரம் - காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை*.
*இடம் - சென்னை - எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் முன்பு.*
________________________________________________________________
அன்புடையீர்,

இந்தியாவில் 10,000 திற்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன, பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே வறட்சியையும் - காலநிலை மாற்றத்தையும் தாங்கி வளரக் கூடியவை. மனித உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டசத்துக்களை உள்ளடக்கியவை. பன்மையான உணவிற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்தவை.

ஆனால் இந்திய அரசு இச்சிறப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை கடந்த மே 4 ம் தேதி அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரகங்களின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு (Biosafety tests) சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை.

இயற்கை வேளாண்மை - பாரம்பரிய ரகங்களை மேம்படுத்துதல் - சிறுதானிய ஆண்டு என அரசே முன்னெடுக்கும் அதே வேளையில். பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யாமல் இது போன்ற இயற்கையை அழிக்கும் செயல்களை இந்திய அரசே செய்து வருவது விவசாயிகளிடையே மிகப் பெரிய வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு ஏற்கனவே பல்வேறு சோதனை முறைகளும் நிபந்தனைகளும் உள்ள நிலையில் அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக மரபணு திருத்தப்பட்ட என்கிற பெயரில் மத்திய அரசு DRR DHAN 100 (Kamala) - Pusa DST Rice - 1 என்ற இரண்டு ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது .

இச்செயல் 140 கோடி மக்களின் ஆரோக்கியமான உணவிற்கு, சுற்றுச்சூழலுக்கு, பல்லுயிர் பாதுகாப்பிற்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இந்த மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களால் நமது உழவர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நெல் இரகங்களளிலும் மரபணு கலப்பு ஏற்பட்டு அவைகளையும் மரபணு மாற்றிய இரகங்களாக மாற்றிவிடும்.

மேலும் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய்யப்படாததால் மக்களுக்கு என்ன வகை பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று எவருக்கும் தெரியாது.

அதாவது மக்கள் மீதே நேரடியாக செய்யப்படும் சோதனையாக இது உள்ளது .

நமது உழவர்கள் காலங்காலமாக மானாவாரி, உவர்நீர் மற்றும் அந்தந்த வட்டார சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற ரகங்களை நெடுங்காலமாக பயிர் செய்து வருகின்றனர்.அத்தகைய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விதை நெல் ரகங்களை கண்டறிந்து பரவலாக்கம் செய்யாமல் புதிய ரகங்களை திணிப்பது எதற்காக?

ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்ட இந்திய விதை சந்தையில், நெல் விதைகள் மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,000 கோடிக்கு மேற்பட்டு விற்பனையாகி வருகிறது.

சிறு - குறு விவசாயிகளின் விதை உரிமையை பறித்து நிறுவனங்களின் விதை அடிமையாக ஆக்குவதற்காகவே இந்த மரபணு திருத்திய நெல்கள் இந்திய உழவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.


எனவே

இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும்

தமிழ்நாட்டில் மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை பயிரிட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசை அறிவிக்க கோரியும்

வரும். பருவத்தில் வேளாண் துறை மூலமாகவோ, தனியார் மூலமாகவோ இந்த நெல் இரகங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படாது என தமிழ அரசு உத்திரவாதம் அளிக்கக் கோரியும்

நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்க தலைவர்களும், சமூக நல அமைப்புகளும், உழவர் போராளிகளும், இயற்கை வேளாண் உழவர் உறவுகளும், இயற்கை வேளாண் முன்னோடிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,நுகர்வோரும், அனைத்து அரசியல் இயக்கங்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம்
தமிழக விவசாயிகள் சங்கம்
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்
இந்திய விவசாயிகள் சங்கம்
காவிரி- வைகை - குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம்
விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
தமிழக உழவர் முன்ணணி
தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கம்
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு

தொடர்புக்கு

Address

NO:66–C, AATHIRAN VANIKAVALAGAM, AINTHUNAI NATURAL FARMERS, JAWAHAR STREET, OPP. IOC PETROL BUNK, COVAI MAIN Road, PUNJAI PULIYAMPATTI, ERODE DIST
Punjai Puliyampatti
638459

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919842553068

Alerts

Be the first to know and let us send you an email when Ainthunai natural farmers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ainthunai natural farmers:

Share