மகிழ் பாவனா பொதிகை பழமுதிர்

  • Home
  • India
  • Tenkasi
  • மகிழ் பாவனா பொதிகை பழமுதிர்

மகிழ் பாவனா பொதிகை பழமுதிர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மகிழ் பாவனா பொதிகை பழமுதிர், Fruit & vegetable shop, மாதாபுரம் செக் போஸ்ட், பெடரல் வங்கி எதிரில், தோரணமலை விலக்கு, Tenkasi.

மலிவான விலையில், அனைத்து விதமான தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒரே இடத்தில் நமது பகுதியில்...

பால், தயிர், டீ, காஃபி, ஃபிரஷ் ஜீஸ், பிஸ்கட் வகைகள், கூல்டிரிங்ஸ் வகைகள், நாட்டுக் கோழி முட்டை அனைத்துமே இங்கே கிடைக்கும்...

வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைக்க சுரைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய், தக்காளி, சௌசௌ, புடல...
19/04/2026

வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைக்க சுரைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய், தக்காளி, சௌசௌ, புடலங்காய், முட்டைக்கோஸ், பாகற்காய், மற்றும் வாழைப்பூ போன்ற அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

இக்காய்கறிகள் உடல் வெப்பத்தைத் தணித்து, செரிமானத்தைச் சீராக்கி, கோடைகால நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க உதவுகின்றன.

கோடைகாலத்திற்கு ஏற்ற முக்கிய காய்கறிகள்:

நீர்ச்சத்து காய்கறிகள்: சுரைக்காய் (96% நீர்ச்சத்து), வெள்ளரிக்காய், பூசணிக்காய், தக்காளி, சௌசௌ, புடலங்காய்.

பச்சை இலை காய்கறிகள்: கீரை வகைகள், புதினா, முட்டைகோஸ்.
இதர காய்கறிகள்: பாகற்காய் (உடல் சூட்டைத் தணிக்கும்), வாழைப்பூ, வாழைக்காய், குடைமிளகாய்.

உணவுமுறை குறிப்புகள்:

சாலட்: வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் கலந்து சாலட் செய்து சாப்பிடலாம்.

பானங்கள்: நீர்ச்சத்து காய்கறிகளை ஜூஸ் செய்து அருந்தலாம் (எ.கா: சுரைக்காய் ஜூஸ்).

மோர்: பழைய கஞ்சி, மோர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து உண்பது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி.

தவிர்க்க வேண்டியவை:

வெயில் காலத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பசலைக்கீரை, கடுகு கீரை போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

உங்கள் மகிழ் பாவனாவில் தற்போது காலை 11மணி முதல் இரவு 10மணி வரையில் 100% வீட்டு மசாலாவில் தயார் செய்யப்பட்ட,. சிக்கன் 65 ...
17/04/2026

உங்கள் மகிழ் பாவனாவில் தற்போது காலை 11மணி முதல் இரவு 10மணி வரையில் 100% வீட்டு மசாலாவில் தயார் செய்யப்பட்ட,.

சிக்கன் 65 🐔
போன் லெஸ் சிக்கன்65 🍗
சிக்கன் லெக் பீஸ் 🍗
பொறித்த மீன் 🐟
காடை 65,
ஃபீப் 65 கிடைக்கும்...

எந்த ஒரு அசைவ வகைகள் 250gm க்கு மேல் வாங்கினால் ரோஸ் மில்க் அல்லது பாதாம் மில்க் இலவசம்!

மேப் லொக்கேஷன் - https://maps.app.goo.gl/3poKKUYFpg9RH3Aq9?g_st=ac

இடம்:
மாதாபுரம் செக் போஸ்ட்
பெடரல் வங்கி எதிரில்
கடையம் பெரும்பத்து
தோரணமலை விலக்கு
தென்காசி மாவட்டம்

புற்று நோய் எதிர்ப்பு சக்திக்கு மங்குஸ்தான் பழம்...மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விள...
15/04/2026

புற்று நோய் எதிர்ப்பு சக்திக்கு மங்குஸ்தான் பழம்...

மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.

மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.

இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன் படுத்தி வந்தனர்.

சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

கண் எரிச்சலைப் போக்க

கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மூலநோயை குணப்படுத்த

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து மங்குஸ்தான் ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

மங்குஸ்தீன் டீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் டீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தவிர்க்கப்படும்.

#மங்கூஸ்தான்

தெரிந்துகொள்வோம்! பகிர்ந்து கொள்வோம்!
03/04/2026

தெரிந்துகொள்வோம்!
பகிர்ந்து கொள்வோம்!

மாதுளையின் அரிய சக்தி!மாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, ...
03/04/2026

மாதுளையின் அரிய சக்தி!

மாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ்
மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில், மாதுளை சிறந்த பலனை தருகிறது.

மூன்று ரக பழங்கள்
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இனிப்பு பழத்தை சாப்பிட்டால், இருதயத்துக்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது; பித்தத்தை போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையை பயன்படுத்தினால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது.
ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும்.

எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சக்தி உண்டு. மாதுளை, மலச்சிக்கலை போக்கும். வறட்டு இருமல் உள்ளவர்களுக்கு, சிறந்த மருந்தாகும்.
வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தாலும், அதை ஆற்றும் குணம் இதற்கு உண்டு. மலத்தில், ரத்தம் வருதல், சீதபேதி போன்றவைகளுக்கு மாதுளம் பிஞ்சு, ஒரு நல்ல மருந்து. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும். ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும். சளி தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் இது சிறந்தது.

நினைவாற்றலை அதிகரிக்கும்
பழத்தில் வைட்டமின் "சி' என்ற உயிர்ச்சத்து உள்ளது; இது, ரத்த உற்பத்திக்கும். ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உகந்தது. நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாக சேர்த்து, வேளைக்கு 30 மில்லி வீதம், தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்கு கொடுத்தால், பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள், 15 கிராம் எடுத்து, 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

இருமல் நிற்கும்
இலைச்சாறு, வயிற்றுப்போக்கை தீர்க்கும். தண்டு மற்றும் வேர்பட்டை, வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது. தசை இறுக்கும் தன்மை கொண்டது. குழந்தை
களுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்படும்போது, மாதுளையின் மலர் மொட்டுக்களை உலர்த்தி பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும். கனியின் சாறு குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து செய்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

விதை மற்றும் கனியின் உட்சதை, வயிற்று வலியை போக்கும். மாதுளம் பூச்சாற்றை, 15 மில்லியளவு சேகரித்து, சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்துக்கு கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களை தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

26/03/2026
மகிழ் பாவனா பொதிகை பழமுதிர்! Mahizh Bhavana Podhigai Pazhamuthir! காய்கறிகள், பழங்கள், பால், தயிர், குளிர்பானங்கள், பிஸ்...
17/03/2026

மகிழ் பாவனா பொதிகை பழமுதிர்!
Mahizh Bhavana Podhigai Pazhamuthir!

காய்கறிகள், பழங்கள், பால், தயிர், குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள் தரமானவைகளாக கிடைக்கும்.

தக்காளி 1கிலோ ₹10
பல்லாரி 1கிலோ ₹10
உருளை 1கிலோ ₹10
முட்டை ஒன்று ₹3
(நிபந்தனைகள் உண்டு)

(கிவி, டிராகன், ஸ்டாஃபெரி, அவகாடோ, ப்ளம்ஸ், செர்ரி கிடைக்கும்)

மகிழ் பாவனா பிரஷ் ஜீஸ் & மில்க் ஷேக்ஸ்
Mahizh Bhavana Fresh Juice & Milk Shake's

அனைத்து வகையான ஃபிரஷ் ஜீஸ்களும், மில்க் ஷேக்குகளும் கிடைக்கும்...

( லஸ்ஸி, பாதாம் பால், ரோஸ்மில்க், ஸ்டாஃபெரி மில்க் கிடைக்கும் )

மகிழ் பாவனா டீ & ஸ்நாக்ஸ்
Mahizh Bhavana Tea & Snack's

டீ - ₹5
பஜ்ஜி - ₹5
வடை, போண்டா - ₹5
ஹார்லிக்ஸ் - ₹15
பூஸ்ட் - 15
பார்சல் டீ - ₹15

093636 39262 9363639262 என்ற எண்ணிற்கு வாட்ஸப் செய்து ஃபிரஷ் ஜீஸ் ஆர்டர் செய்து வாங்கினால் ₹10 தள்ளுபடி.

₹500க்கு மேல் பொருட்கள் வாங்கினால் ₹50 தள்ளுபடி உங்கள் அடுத்த வருகையின் போது...

இடம்: மாதபுரம் செக்போஸ்ட், பெடரல் பேங் எதிரில்
கடை நேரம்: காலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை.

ஏன் அதிகமாக பச்சை நிற உணவுகளை சாப்பிட வேண்டும்?நமது தினசரி உணவில் அதிக அளவில் பச்சை நிற உணவுகளை சேர்ப்பது உடல் நலத்தை ஆத...
25/02/2026

ஏன் அதிகமாக பச்சை நிற உணவுகளை சாப்பிட வேண்டும்?

நமது தினசரி உணவில் அதிக அளவில் பச்சை நிற உணவுகளை சேர்ப்பது உடல் நலத்தை ஆதரிக்க மிகவும் எளிய மற்றும் பயனுள்ள வழியாகும் 🌿

வெள்ளரிக்காய், பசலைக் கீரை, அவகாடோ, ப்ரோக்கோலி, நோபால்ஸ் (கற்றாழை வகை), சாயோட், பச்சை ஆப்பிள் போன்ற உணவுகள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்தவை.

இந்த சத்துக்கள்:
✔️ இதயம் சீராக செயல்பட உதவுகின்றன
✔️ இரத்த நாளங்களை (arteries) நெகிழ்வாக வைத்திருக்க உதவுகின்றன

இரத்த நாளங்கள் நெகிழ்வாக இருந்தால், ரத்த அழுத்தம் இயல்பான அளவில் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது 📉

மேலும், இந்த பச்சை உணவுகளில் உள்ள நார்ச்சத்து (Fiber) குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. அது ஒரு இயற்கை தூரிகை போல செயல்பட்டு குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது 🧹

இதில் உள்ள பொட்டாசியம் (Potassium) உடலின் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதுவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

💚 பச்சை உணவுகளை சேர்ப்பது கடினம் அல்ல!

🥚 உங்களின் ஆம்லெட்டில் பசலைக் கீரை சேர்க்கலாம்
🥗 சாலட்டில் வெள்ளரிக்காய் சேர்க்கலாம்
🌮 டாக்கோவில் அவகாடோ சேர்க்கலாம்
🥦 ப்ரோக்கோலியை ஆவியில் வேகவைத்து பக்கக்காரமாக சாப்பிடலாம்

சிறிய தினசரி மாற்றங்கள் காலப்போக்கில் பெரிய பலன்களை தரும்.
புதியதும் இயற்கையானதும் ஆன உணவுகளை உடல் எப்போதும் சிறப்பாக ஏற்றுக்கொள்கிறது 💚🌿

093636 39262

இரவில் 20 வேர்க்கடலைகளை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை கருப்பட்டியுடன் மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுவது உடலுக்கு தேவையான...
29/01/2026

இரவில் 20 வேர்க்கடலைகளை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை கருப்பட்டியுடன் மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுவது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் இயற்கையான சக்தியையும் வழங்குகிறது. இது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு ஆரோக்கிய உணவுப் பழக்கம்.

தொடர்ந்து இதை உணவில் சேர்த்தால், உடல் சுறுசுறுப்பாகவும் மனம் தெளிவாகவும் இருக்கும். சரியான உணவுப் பழக்கம் மற்றும் செயல்திறன் கொண்ட வாழ்க்கை முறையுடன் இணைத்தால், நீண்ட காலத்தில் உடல் வலிமையும் சக்தி நிலையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்!கர்ப்பிணியின் நலமான வாழ்வுக்கும், கருப்பை உட்சிசுவின் முறையான வளர்ச்சிக்கும்...
27/01/2026

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்!

கர்ப்பிணியின் நலமான வாழ்வுக்கும், கருப்பை உட்சிசுவின் முறையான வளர்ச்சிக்கும், கர்ப்பகாலத்தில் போஷாக்கான உணவு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிக்கான தவறான உணவூட்டம் தாய்க்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி, கருப்பை உட்சிசுவின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

கர்ப்பத்தின் போது பெண்களில் நிகழும் உடலியல் மாற்றங்களையும், கர்ப்பிணிக்கும், வளரும் சிசுவிற்கும் மிகையாகத் தேவைப்படுகின்ற ஊட்டப் பொருட்களையும் கவனத்திற்கொண்டு கர்ப்பிணிகளுக்கான உணவு முறை திட்டமிடப்படவேண்டும்.

கர்ப்பத்தின் முதற்பகுதியில், உணவு வழக்கத்திற்கு மாறாக இல்லாமல், நல்ல ஊட்டப் பொருட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் உணவில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. கர்ப்பத்தின் முதல் மாதங்களில் சுவை மாறுபாடடைகின்றது. 3-4 ஆவது மாதங்களில் சிறப்பான உணவுகளுக்கான ஆசை எதுவும் இருப்பதில்லை.

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் துவக்க மாதங்களில் (குறிப்பாகக் காலை வேளைகளில்) குமட்டல் காணப்படுகின்றது. இத்தகைய பெண்கள் காலை உணவை படுக்கையில் இருந்து கொண்டே அருந்திய பின்னர், எழுந்து நடமாடலாம்.

கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் காய்கறிகளும், பால் பொருட்களும் வழங்கப்படலாம். இறைச்சி, மீன்வகைகளை குறைந்தளவில் உள்ளெடுக்கலாம்.

பழங்கள், உலர் விதைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் தாய்க்கும், சேய்க்கும் தேவையான விட்டமின்கள் அதிகளவில் காணப்படுவதால் அவை மிகவும் பலனளிக்கின்றன.

வாரத்தில் 3-4 தடவைகள் மாமிசம் கொடுக்கப்படலாம். மாமிசத்திற்கும், மீன்களுக்கும் பதிலாக பாலும், காய்கறிச் சாறுகளும் கொடுக்கப்படலாம்.

விலங்கினப் புரதத் தேவைகளை ஈடுசெய்ய முட்டை, தயிர், பாலோடு மற்றும் ஏனைய பால் பொருட்களைக் கொடுக்கலாம்.

கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் உணவுடன் சேர்க்கப்படவேண்டிய உப்பின் அளவு குறைக்கப்பட வேண்டும். மதுபானங்கள், மிளகு, கடுகு, வினிகர், காரமான மசாலா நிறைந்த பொருட்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

கர்ப்பத்தின் போது கல்லீரல், சிறு நீரகங்கள், ஏனைய உறுப்புக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகப் பணிபுரிகின்றன. இவற்றின் பணிகள் சீர்குலையாமல் இருக்க, மேற்படி உணவுக்கட்டுப்பாடுகள் அவசியமாகும்.

கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவின் வளர்ச்சிக்கும் அதிகளவில் விட்டமின்கள் தேவைப்படுகின்றன. அரைகுறையான விட்டமின்கள் உடலுறுப்புக்களின் பணியாற்றும் திறனைக் குறைப்பதோடு, நோய்த் தொற்றுகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கின்றது.

விட்டமின்கள் பற்றாக்குறையாக இருந்தால் மாலைக்கண், ரிக்கட்ஸ், ஸ்கர்வி, நரம்பு மண்டல நோய்கள் உண்டாகின்றன. கர்ப்பகாலத்தின் போது விட்டமின் பற்றாக்குறை காணப்பட்டால் சிசுவின் விகார வளர்ச்சி, கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம் ஆகியவை ஏற்படலாம்.

ஆகவே, பெண்ணின் இன்றியமையாத பணிகளுக்கு அதிகளவு விட்டமின்கள், அதிகளவு விட்டமின்கள் கொண்ட உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கர்ப்பிணி தினமும் 4 தடவைகள் சாப்பிட வேண்டும். தினசரி உணவின் 25-30 சதவீதத்தினை காலை உணவிலும், 40-45 சதவீதத்தினை மாலை உணவிலும், 15-20 சதவீதத்தினை இரவு உணவிலும் எடுக்க வேண்டும்.

கர்ப்பிணி தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், புளித்த பால் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.

Address

மாதாபுரம் செக் போஸ்ட், பெடரல் வங்கி எதிரில், தோரணமலை விலக்கு
Tenkasi
627415

Opening Hours

Monday 6:30am - 10:30pm
Tuesday 6:30am - 10:30pm
Wednesday 6:30am - 10:30pm
Thursday 6:30am - 10:30pm
Friday 6:30am - 10:30pm
Saturday 6:30am - 10:30pm
Sunday 6:30am - 10:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when மகிழ் பாவனா பொதிகை பழமுதிர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share