28/10/2025
மதி - மகளிர் சுய உதவிக்கு குழு தயாரிப்பு, திருவள்ளூர் பூமாலை வளாகத்தில்,
புதிய தொடக்கம்
எங்களை பற்றி முதலில்... புவி இயற்கை அங்காடி
ஐந்து வருடங்கள் தொடர் முயற்சி. கொரோனா காலத்தில் தொடங்கிய கடை. இடையில் பல இடற்பாடுகள். கடன் சுமைகள். பொதுமக்களிடம் தரமான பொருட்களை நியாயமான விலையில் கொண்டு சேர்க்கும் போது, வெளியே நம்பகத் தன்மை குறைவாய் உள்ள காரணத்தால் எங்களுக்கும் பல கேள்விகள், விசாரணைகள். இடையில், நோக்கத்தை பாதிக்கும் பலரது தலையீடுகள். தொடர் வெற்றியும், தொடர் தோல்வியும் எங்களை என்றுமே பாதித்ததில்லை. வெற்றிகளை படிக்கட்டுகளாக, தோல்விகளை மீண்டும் மற்றொரு முயற்சிக்கான அடித்தளமாக கருதி முன்னேறிக் கொண்டே இருந்தோம்.
எங்கும் போஸ்டர் ஒட்டி தம்பட்டம் அடிக்கவில்லை. பெரிதாக எந்த விளம்பரம்மும் இல்லை. வெறும் word of mouth ல் சாத்தியப்படுகிறது இந்த மெதுவான வளர்ச்சி. புவி இயற்கை அங்காடி நளினி என்றால் கலப்படமற்ற அசல் பொருட்களை மட்டுமே விற்கும் காராரான பேர்வழி.. சரியான நேரத்தில் payment வரும்...என்ற பெயரை இயற்கை விவசாயிகள் மத்தியில் பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
வாடிக்கையாளர்கள் எல்லா இடங்களிலும் நளினியை இனம் காணும் போது நான் மெல்ல உணர்ந்தது புவி இயற்கை அங்காடியின் வளர்ச்சி.
அடுத்த கட்டமாக பல ஆண்டுகளாய் நாங்கள் எதிர்பார்த்த விவசாய சந்தை பங்கெடுப்பு. ஆறு மாதங்களாக சிறப்பான முறையில் நளினியின் விடா முயற்சியால் விவசாயிகள், பொதுமக்கள் இயற்கை உணவையும், விளைபொருட்களையும் உண்டு ரசித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று நளினியை எங்கள் குடும்பத்தில் யாராலும் பார்க்கவியலாது. அத்தகைய விடா முயற்சி...
சமீபத்தில் உழவர் சந்தையில் ஒரு கடை, விவசாயிகள் முயற்சியில், மகளிர் சுய உதவிக்கு குழு பெயரில் தொடங்க இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ந்தோம். பெயர் மதி! புவியை போல இரண்டெழுத்து. அதற்கான முன்னெடுப்புகளில் விவசாயிகள் ஈடுபட, பல பட்டினிலைகளில் விவாதங்கள் நடக்க, முடிவாகநளினியின் மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கு அத்தாட்சியாக, திருவள்ளூர் மய்யப் பகுதியில் நிர்வகிக்க தோதான நபர் என்ற முறையில்,
ஒரு அரச அங்கீகாரம் நளினிக்கு கிடைத்துள்ளது. விவசாயிகளின் பொருட்களும், எங்கள் பொருட்களும் இணைந்து உழவர் சந்தைக்கு அருகில் ஓர் கடையில் விற்பனைக்கு வைக்கப்படும். நளினி அதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். உள்ளபடியே பெருமிதத்தில் நான். இது சரியாக வர வேண்டுமே என்ற பதட்டம் மட்டுமே! மற்றபடி உங்கள் அனைவரது வாழ்த்துகளும் அவசியம்!