தாய்வழி இயற்கை விவசாய பண்ணை

  • Home
  • India
  • Villupuram
  • தாய்வழி இயற்கை விவசாய பண்ணை

தாய்வழி இயற்கை விவசாய பண்ணை Organic rice, Vegetables, Oil's, Millet, Dall, Milk, for all food items available.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾       *பாரம்பரிய நெல் அறுவடை*🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜      சம்பா பருவத்தில் பயிர் செய்த நம் பாரம்பரிய நெல் வகைகள் (கடந்...
05/01/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

*பாரம்பரிய நெல் அறுவடை*

🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜

சம்பா பருவத்தில் பயிர் செய்த நம் பாரம்பரிய நெல் வகைகள் (கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நாற்று விட்டு, இரண்டே வாரத்தில் நடவு செய்த) நெல்கள்👇

🌾 *தூயமல்லி* - (22மூ/75கி/ஏக்கர்)
🌾 *சீரகச்சம்பா* - (15மூ/75கி/ஏக்கர்)
🌾 *தங்கச்சம்பா* - (22மூ/75கி/ஏக்கர்)
🌾 *கருப்பு கவுனி* - (18மூ/75கி/ஏக்கர்). விளைச்சல் வீதம்

ஆகியவை தற்போது முதல் கட்டமாக இயந்திரம் மூலம் அறுவடை செய்துள்ளோம்...

மறு உற்பத்தி விதைகளுக்காக மட்டும் கைகளால் அறுவடை செய்து கலப்பில்லாமல் சேமித்தது போக மீதமுள்ளவை இயந்திர அறுவடை செய்துள்ளோம்...

*இந்த ஆண்டு நெல் பயிர்களுக்கான சூழல் இருந்ததால்! விளைச்சல் நன்றாகவே உள்ளது..*

(அதிகம் வளர்ச்சி இருந்ததால்! பயிர்கள் சாய்ந்து அறுவடையில் சற்று சிரமம் ஏற்பட்டது)..

மற்ற ரகங்கள்
🌾 *மணிச்சம்பா*
🌾 *செ.சிருமணி*
அடுத்த கட்ட (கை) அறுவடைக்கு தயாராகிறது..

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*Pandiya farm*
*Gingee Arunpandiyan*
Gingee taluk
Melpappampadi village
9626788655

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱*"சம்பா பட்டம் @நெல் விதைப்பு"*🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾* #பலதானிய விதைப்பு!** #கால்நடைகளுக்கும் உணவு!** #நெல் நாற்றாங்கா...
17/08/2023

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

*"சம்பா பட்டம் @நெல் விதைப்பு"*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

* #பலதானிய விதைப்பு!*
* #கால்நடைகளுக்கும் உணவு!*
* #நெல் நாற்றாங்கால் உழவு!*

*@சம்பா பட்டத்தில்!*
நம் பாரம்பரிய நெல் வகைகளை நடவு செய்வதற்கான பணியை செய்துவருகிறோம்.

🍀 கடந்த சித்திரை பருவத்தில் நிலக்கடலை விதைத்து, அறுவடை செய்த நிலத்தில், தற்போது அடுத்தபடியாக சம்பா பருவம்(ஆடி பட்டம்) துவங்கிய நிலையில், நெல் விதைப்பதற்க்கான முதல்கட்டமாக பலதானியத்தை விதைத்து, அதில் ஒரு பகுதியில் நாற்றாங்கால் உழவு செய்துள்ளோம்.

🍀 *நெல் நடவுக்கான ஒரு கண்ணோட்டம்!*

🍀 மண்ணில் அங்கக கரிமத்தை உயர்த்தவும், நெல் பயிர்களுக்கான பேரூட்டம்,நுண்ணூட்டங்களை நாம் முன்னதாகவே அந்த நிலத்தில் இடவேண்டியது அவசியமாகிறது.

🍀 அந்த வகையில் இதற்காக
நம் முன்னோர்கள்
* #வண்டல் மண்*
* #கால்நடைகளின் கழிவுகள்*
* #கிடை மடக்குதல்*
* #உரச்செடி விதைப்பு*
* #இலை தழைகளை பரப்பியும்*
என பல ஊட்டங்களை மண்ணில் இட்டு நெல் பயிர் உற்பத்தியை செய்தனர்.

🍀 அதை நாமும் இங்கு அப்படியே செய்து வருகிறோம்.
அந்த வகையில் முதலில் எங்களிடம் இருக்கும் *கால்நடைகளை (அதன் கழிவுகளுக்காக) மண்ணில் படுக்கவைத்து*, பின்பு நிலத்தை உழுது,
தனது வேர்முடிச்சுகளில் நைட்ரஜன் சேமிக்கும் செடிகளை
* #தக்கைப்பூண்டு*
* #சனப்பு*
* #உளுந்து*
* #பச்சைப்பயறு*
* #தட்டைப்பயறு*
* #நிலக்கடலை*
இது போன்ற விதைகளை விதைத்து,
அவைகள் பூக்கும் தருவாயில் தற்போது அதில் ஒரு சிரு பகுதியில் நாற்று விடுவதற்கு சேடை உழவு செய்துள்ளோம். அதில் கூடுதலாக
*ஆட்டு எருவையும்,*
*கால்நடைகள் கழித்த நிலக்கடலை கொடியையும்*,
*வரப்பு ஓரங்களில் இருந்த மர இலை தழைகளையும்* பரப்பி உழவு செய்துள்ளோம்...

🐑🐂 இதற்க்கிடையில் விதைக்கப்பட்ட தானிய செடிகள்🌱🍀 கால்நடைக்கும் உணவாய் அமைந்தன...

*இதன் அடுதகட்ட பணிகளை தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக பதிவிடுகிறேன்*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*Pandiya farm*
*Gingee Arunpandiyan*
Melpappampadi village
Gingee taluk
9626788655

Address

Pappamapdi(MEL) , Gingee
Villupuram
604152

Telephone

9626788655

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாய்வழி இயற்கை விவசாய பண்ணை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தாய்வழி இயற்கை விவசாய பண்ணை:

Share