பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Kalmunai
  • பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயம்

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயம் பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயம்

24/06/2025

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.கல்முனை மாநகரில் கருணை நிறை தெய்வமாக எல்லோரும் இரந்து இருகைகூப்பித் தொழும் வல்ல வினையறுத்து வாழ வைக்கும் அல்லல் அறுத்து ஆனந்தம் தரும் அன்னை பெரிய நீலாவணை பேச்சி அம்மனின் ஆனி உத்திர திருச்சடங்குப் பெருவிழா 25/06/2025 புதன் கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி;27/06/2025 வெள்ளிக்கிழமை ஊர்க்காவல் திருச்சடங்கும் 01/07/2025 புதன் கிழமை கன்னிக்கால் திருச்சடங்கும்..04/07/2025 அன்று பால் பானை எடுக்கும் திருச்சடங்கும் இடம்பெற்று அன்னையவளின் 2025 ஆம் ஆண்டிற்கான திருச்சடங்கானது 5/7/2025 சனிக்கிழமை காலை பள்ளையத் திருச்சடங்கோடு இனிதே நிறைவு காண அன்னையருள் கைகூடியுள்ள இந்த புனிதமான நாட்களில் அன்னை அடியார்கள் பேசும் தெய்வமென்று போற்றப்படும் பிரசவத்திலும் பிள்ளைகளைக் காப்பதிலும் மாதவர் வேண்டுதலை மனதார நிறைவேற்றிடும் நமது குலதெய்வமாய் கோயில் கொண்ட பெரியாச்சியெனும் பேச்சியின் திருவருட் கடாச்சத்தினை பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.பெரிய நீலாவணை மகாவிஷ்ணு பேச்சியம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையினர்.ஓம் சக்தி!

*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்* திரிதல ராஜ கோபுர மூன்று தலத்திற்குமான பூச்சு வேலைகளை பூர்த்தி செய்யும் தருவாயில் தற்போத...
09/03/2025

*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்*
திரிதல ராஜ கோபுர மூன்று தலத்திற்குமான பூச்சு வேலைகளை பூர்த்தி செய்யும் தருவாயில் தற்போது உள்ளது. அதனைத் தொடர்ந்து பொம்மை வேலைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நிருவாக சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அண்ணளவாக 75 பொம்மைகள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான ஒரு பொம்மை செய்வதற்காக 20000/= செலவீனமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. (இது பொருட்கள் மற்றும் கூலி அடங்கலாக) இதனை செய்து தரக்கூடிய அடியார்கள் இதற்கான அன்பளிப்புகளை வழங்கி இதனை செய்து முடிப்பதற்குரிய உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ் ராஜ கோபுர வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அன்பளிப்பு மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்கி கொண்டிருக்கும் அனைவருக்கும் பரந்தாமன் அருள் ஆசிகள் கிடைக்க வேண்டுவதோடு நிருவாக சபையினரின் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏🙏🙏🙏🙏

14/09/2024

கிருஷ்ணார்ப்பனம்

ஓம் நமோ நாராயணாய. .
ஓம் நமோ நாராயணாய..
ஓம் நமோ நாராயணாய. ..

அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி..
பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஷ்ணு சந்நிதான திரிதள இராஜகோபுர அடிக்கல் நாட்டும் விழா 15/09/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11.03 மணி தொடக்கம் 12.00 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில் இடம் பெற பெருமான் அருள் கைகூடியுள்ளது .

ஆகவே மஹாவிஷ்ணு மெய்யடியார்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வாருங்கள் நம் மானிட வாழ்வின் வீடு பேறு அந்த பரப்பிரம்மத்தின் பாதங்களிலே உள்ளது அதனைப் பற்றிப் பிடிப்போம் அடியார்களே!

இவ்வண்ணம் - மகா விஷ்ணு பேச்சியம்மன்
ஆலயங்களின் பரிபாலன சபை
பெரியநீலாவணை.
🙏🙏🙏🙏🙏🙏🙏

12/09/2024
ஆலயத் திருவிழா அலங்காரம் மற்றும் மங்கள காரியச்சோடனைகள்.**************************************************மட்டக்களப்பு- ந...
22/05/2021

ஆலயத் திருவிழா அலங்காரம் மற்றும் மங்கள காரியச்சோடனைகள்.
**************************************************
மட்டக்களப்பு- நாவற்குடாவில் தம்பி ஒருவர்
மிகவும் அழகான அலங்கார வேலைகளைச்
செய்துவருகின்றார். அனைத்துக்கும் இவர் இயற்கை மூலப்பொருட்களைப் பாவித்துச்
செய்கின்றார். நமது பிரதேச தென்னை ஓலை முதல் மலைநாட்டுப் பிரதேசத்தின்
இயற்கைப் பூக்களும் அடங்குகின்றன.
இவ்வாறான கைப்பணிக் கலைஞர்களை
நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதற்கமைய
நாட்டு நிலைமை சீரானபின் தேவையான
ஆலயத்திருவிழாச் செய்பவர்கள், திருமண
வீட்டார் ஆகியோர் அவருடன் தொடர்பு
கொண்டு இச்சேவையினைப் பெறமுடியும்.
தொடர்பு-0776798473. சு. சுகிர்தராஜா.

இவரின் கைவண்ணங்களில்
செய்த அலங்காரங்கள் சில.......

 #பெரிய  #நீலாவணை  #ஶ்ரீ  #மஹா  #விஸ்ணு  #தேவஸ்தான 2ம்நாள் பூசையின் போது எம் பெருமான்...
22/08/2020

#பெரிய #நீலாவணை #ஶ்ரீ #மஹா #விஸ்ணு #தேவஸ்தான

2ம்நாள் பூசையின் போது எம் பெருமான்...

24/02/2019

Address

பெரியநீலாவணை
Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயம்:

Share