19/10/2024
தேர்தல் வந்து விட்டால்
+++++++++++++++++++++
அடுத்தவர் மானம்
செல்லாக்காசாக மாறி விடும்
அடுத்தவர் உரிமை
காழ் தூசிக்கு சமனாகி விடும்
ஊரார் சுவரிலெல்லாம்
கட்சிக்காரர்களின் கைவண்ணமிருக்கும்
முனாபிக்,முஷ்ரிக்
பத்வாக்கள் மலிந்து விடும்
உள் வீட்டுப் பிரச்சினைகள்
சந்தி சிரிக்கும்
அண்டப் புழுகளெல்லாம்
வேத வாக்காக மாறி விடும்
நண்பர்கள்,குடும்பங்களெல்லாம்
முரண்பட்டு சண்டைக்கு நிற்பர்
சீஸன் வியாபாரிகளாக
அரசியல்வாதிகள் மாறி விடுவர்
பொய்களும் வாக்குறுதிகளும்
மலிந்து போய் காணப்படும்
சந்திகளிலெல்லாம் மக்கள்
வம்பை விலை கொடுத்து வாங்குவர்
பள்ளிகளில் இறை வணக்கத்திற்கு
அறிந்து கொண்டே இடையூறு செய்வர்
பேச்சில் வின்னரெல்லாம்
வாயால் வடை சுடுவர்
ஊர் பலாய் பேசுவதற்கு
ஒரு சமூகமே தயாராகும்
ஹோட்டல்களில் பொய்யான
பில் கேட்டு சில அல்லக்கைகள் அலைவர்
வீதியால் செல்லும் அப்பாவியை
சும்மாவே வம்பிழுப்பர் சிலர்
தொழிலில்லா சோம்பேறியெல்லாம்
பந்தியாய் எழுதி தலைவர்களைப் புகழ்வர்
முகத்திற்கு நேரே புகழ்ந்து
முதுகிற்குப் பின்னே குத்துவர் சிலர்
வீதியை மறித்து தடை செய்து
வீராப்புக் காட்டுவார் சிலர்
தலைவர்கள் துதி பாடியே
தன் வீட்டு நிலையை மறப்பர் பலர்
வாக்குரிமை இல்லாதவரெல்லாம்
கட்சி அலுவலகத்தில் நிறைந்திருப்பர்
தொழில் இல்லாதவரெல்லாம்
தொண்டர் எனச் சொல்லி வயிறு வளர்ப்பர்
சுயநலவாதியெல்லாம் சமூகத்தின்
நாயகனாக மாறி விடுவர்
கள்வர்களுக்கும்,கயவர்களுக்கும் கூட
கட் அவுட் வைக்கப்படும்
நல்லவர்களுக்கும்,வல்லவர்களுக்கும் கெட் அவுட் சொல்லப்படும்
சைத்தானிய இசையும் பட்டாசும் காவாளித்தனமும் கட்டவிழ்த்து விடப்படும்
கஞ்சனெல்லாம் வள்ளலாக
மாறி விடுவர்
சந்தர்ப்பவாதி தியாகியாக
மாறி விடுவான்
தொடரும்