20/01/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
GSWO அமைப்பினால் நடத்தப்பட்ட வருடாந்த பொதுக்கூட்டம்
காலம் : 2025.01.02 வியாழக்கிழமை
நேரம் : 6.30pm- 9.30pm
இடம் :- GSWO அமைப்பின் தற்காலிக அலுவலகம் (தலைவர் அவர்களின் வீடு)
மேற்படி கூட்டம் அமைப்பாளர் M.A.M.முபாரிஸ் அவர்களின் தலைமையில் 2025.01.02. ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் தலைவர் அவர்களின் வீட்டில் துஆவுடன் இனிதே ஆரம்பமானது.
இதில் தலைவர் அவர்கள் ஆரம்பமாக அமைப்பைப் பற்றிய அறிமுகத்தையும் மற்றும் அதன் எதிர்கால செயல்திட்டங்களை பற்றியும் மற்றும் இந்த நிர்வாகத்தில் புதிய நிர்வாகிகளை உள்வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் நிர்வாகத்தை மாற்றி புதிய உறுப்பினர்களை உள்வாங்கி நிர்வாகத்தை சீரமைத்தார்.
அத்துடன் இக்கூட்டத்தில் முழுமையாக இவ் அமைப்பின் யாப்பு வாசிக்கப்பட்டு முழு மனதுடன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் போது தலைவரால் அமைப்பைப் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டது. அதில்
• இந்த அமைப்புக்கான அடித்தளம் 2019 ஆண்டு உருவாக்கப்பட்டு சதக்கத்துல் ஜாரியா அமைப்பு என்ற பெயரில் இதன் வேலை திட்டங்களை ஆரம்பித்தது.
பின்னர் இவ்வமைப்பானது “இலங்கையின் பொது சமூக நல அமைப்பு “என்று உத்தியோகபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதனை தெளிவு படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இவ் அமைப்பின் நோக்கத்தை பற்றியும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றியும் தெளிவு படுத்தினார் அதில்.
1. அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளில் முழு கவனத்தையும் செலுத்துவதன் மூலம் ஊழலற்ற, உதாசீனமற்ற, பொறுப்பற்ற , தன்மையை ஒழித்து பொறுப்பான, நம்பிக்கையான, உறுதியான சக்தி வாய்ந்த நிறுவனங்களாக மாற்றி அமைப்பது. மற்றும் உரிய அமைச்சுகளுக்கு முறையாக தகவல் வழங்குவது அமைப்பின் மிக முக்கியமான நோக்கமாகும்.
2. கல்வி அபிவிருத்தி செயல் திட்டங்களை கொண்டு வருதல்.
3. சுகாதார அபிவிருத்தி வேலை திட்டங்களை மேம்பட செய்வதன் ஊடாக வைத்தியசாலையின் தொழிற்பாடுகளை முறையாக செயல்பட வைத்தல்.
4. போதை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளுதல்.
5. அரசாங்க அபிவிருத்தி உதவிகளைப் பெற்று விவசாய ,வீதி ,பொது கட்டிட மற்றும் அத்தியவசிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வருதல் .
6. வீடமைப்பு திட்டங்களை கொண்டு வருதல்.
7. அத்துமீறல் செயற்பாடுகளை இல்லாது ஒலித்தல்.
8. மக்களின் உரிமைகளை பாதுகாத்தல்.
9. வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்தல். பெண்கள் வெளிநாட்டுக்குச் சொல்வதை தடுத்தல்.
10. சிறுவர்களுக்கான மனநலன் பற்றிய உளவியல் விழிப்புணர்வு, ஆளுமை வளர்ச்சி பற்றிய நிகழ்ச்சிகளை வழங்குதல்.
11. சுற்றுப்புற சுகாதாரத்தை பேணும் வகையில் நிகழ்ச்சி திட்டங்கள் அமைத்தல்.
12. பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வி , பாதுகாப்பை வழங்குதல்.
13. சமூகப் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்குதல்.
14. சமூக நல திட்டங்களை முன்னெடுத்தல்.
15. கலாச்சார விழாக்களை நிகழ்த்துதல்.
16. முதியோர்களுக்கான ஆதரவு வழங்குதல்.
17. ஏழ்மை நீக்க திட்டங்களை கொண்டு வருதல்.
18. அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துதல்.
19. விவசாய தொழில்முனைவோர் ஆதரவு வழங்குதல்.
20. அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
21. உரிமைகள் மற்றும் சட்டப்பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துதல்.
22. சமுதாயத்தில் ஆளுமை மிக்க பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்குதல்.
23. இளைஞர்களுக்கான பயிற்சிகள் வழங்குதல்.
24. எதிர்கால அபிவிருத்தி செயல் திட்டங்கள் உருவாக்குதல்.
25. வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கர்த்தரங்குகளை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
26. மக்கள் தொகை பற்றிய விவரங்களை சேகரித்தல்.
27. உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
28. சமூக சொத்துகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
அதனைத் தொடர்ந்து அமைப்பின் உத்தியோகபூர்வ முகவரி, அலுவலகம் போன்றவற்றை தெளிவு படுத்தினார்.
அத்துடன் நிர்வாக கட்டமைப்பையும் அவர்களுடைய பொறுப்புகளையும் பற்றி முழுமையாக தெளிவு படுத்தினார்.
அதேபோன்று நிர்வாகத்தின் மேன் பதவிகளில் இருப்பவர்கள் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் சரத்துக்கள்( தலைவர், உப தலைவர் , செயலாளர், உப செயலாளர், பொருளாளர்.) மற்றும்
நிர்வாக உறுப்புரிமை தகமைகள்
நிர்வாக உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் சர்த்துக்கள்
நிர்வாகத்தின் உறுப்புரிமையை இழப்பதற்கான சந்தர்ப்பங்கள்
அமைப்பால் வழிகாட்டல்பயிற்சி வழங்கபடுபவர்கள் அவர்களுடைய விபரங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்
அத்துடன் அமைப்பில் அங்கத்துவம் வகிப்பவர்கள் , மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள் , எதிர்காலங்களில் பெற்றுக் கொள்ளும் பிரதி பலன்கள் பற்றியும் தெளிவு படுத்தினார் அதில்
இவ் அமைப்பால் வழங்கப்படும் உதவிகள் , நிவாரணங்கள், எதுவும் இவ் அமைப்பில் அங்கத்தவராகியதில் இருந்து அவர்கள் மேற்கொள்கின்ற ஈடுபடுகின்ற , வேலைகள், முயற்சிகள் , ஒத்துழைப்புக்கள், பொது வேலைகளில் பங்கு கொள்ளுதல், அதேபோன்று அமைப்பின் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளுதல் போன்ற மிக முக்கியமான விடயங்களை பொறுத்தே நிர்ணயிக்கப்படும்.
o இலங்கையின் பொது சமூக நல அமைப்புகளில் (GENERAL SOCIAL WELFARE ORGANIZATIONS) அங்கத்துவம் வகிப்பவர்கள், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு நன்மைகளைப் சட்டரீதியிலும், சமூகத்திலும், நிதி அடிப்படையிலும் அடைய முடியும்.
o நலன் சார்ந்த சேவைகளுக்கு முன்னுரிமை ( மருத்துவ உதவி, கல்வி உதவி, அனுதாப நிதி, சூழ்நிலைக்கேற்ப தேவையான உதவிகள்).
o சமூக கட்டமைப்புகளில் பங்கு பெறும் வாய்ப்பு.
o உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உறவுகள் வளர்க்கும் சந்தர்ப்பம்.
o சமூகத்தில் மேலிடத்தின் அடையாளம் பெறுதல்.
o அரசியல் மற்றும் சமூக தளங்களில் ஆதரவு மற்றும் செல்வாக்கு பெறுதல்.
o தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் வாய்ப்பு.
o புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அனுபவம்.
o திட்டங்களுக்கான நிதி பெறும் மற்றும் கண்காணிக்கும் நடைமுறைகளில் அனுபவம்.
o அங்கத்தினரின் தேவைகளுக்காக அரசாங்கத்திலிருந்து அல்லது தனியார் அமைப்புகளிலிருந்து பெறப்படும் உலாவிகளில் முன்னுரிமை.
o பல்வேறு பதவிகளுக்கு முன்னுரிமை பெற்றிட வாய்ப்பு
o நிர்வாகிகளின் திறமை, ஆளுமை, மற்றும் செயற்பாடுகளால் அவர்கள் மாவட்டம் அளவில் பல்வேறு பலனை பெற்றுக் கொள்ள முடியும்.
o சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்படும்.
o அமைப்பின் சட்டச்சார்ந்த உறுப்பினராக இருப்பதால் அமைப்பால் மேற்கொள்ளப்படும் வழங்கப்படும் அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்படும்.
போன்ற முக்கியத்துவங்களை தெளிவுபடுத்தியதன் பின்னர் இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் நிதி கொள்கைகள் நிர்வாகக் கூட்டங்கள் நிதி பெற்றுக் கொள்ளும் வழிகள் என்பவற்றை தெளிவுபடுத்தினார்
அத்துடன் மீடியா குழுவின் தொழில்பாடுகள் பற்றியும் தெளிவு படுத்தினார் அதில்
1. தகவல் பரிமாறுவதற்கு என்று whatsapp facebook குடும்பங்களை இயக்குதல்
2. சமகாலத்தில் நிகழ்கின்ற உண்மை தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்
3. அரச ஊழியர்களை பேட்டி கண்டு அவர்களுடைய கடமைகள் பொறுப்புகளை மக்களுக்கு தெரியப்படுத்துதல்
4. சமூகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களின் தொழில் பாட்டை பேட்டி கண்டு சமூகத்திற்கு தகவல் வழங்குதல்.
5. சமூகத்தில் உள்ள மிக முக்கியமான பிரச்சனைகளை உரிய இடங்களுக்கு வழங்குதல்
6. அரச ஊழியர்கள் மற்றும் அரசு சார்பற்ற ஊழியர்களின் பொறுப்புகளில் மிகவும் அவதானம் செலுத்துதல் மற்றும் மக்களுக்கு தகவல்கள் வழங்குதல்.
7. அவ்வப்போது சமூகத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் செயல்திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்.
8. அனைத்து கிராம சமூகங்களில் நிகழ்கின்ற இருக்கின்ற பிரச்சனைகள் தகவல்களை சமூகத்தில் உள்ள பொறுப்பதிகாரர்களிடம் தெரியப்படுத்துதல்.
9. சமூகத்தில் கஷ்டப்படும் குடும்பங்களை பேட்டி கண்டு உரிய நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்று கொடுத்தல்
10. வாழ்வாதார வசதிகள் அற்று வாழும் குடும்பங்களை பேட்டி கண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை உரிய அதிகாரிகளை அணுகி பெற்றுக் கொடுத்தல்.
11. தனியார் விளம்பரம் போன்ற செய்திகளை கட்டணத்துடன் மக்களுக்கு வழங்குதல்.
12. அரசு ஊழியர்களின் மிக முக்கியமான செய்திகளை மக்களுக்கு வழங்குதல்.
1.1. தனியார் விளம்பரங்களை பெற்றுக் கொள்ளும் போது அளவிடப்படும் கட்டணம் சம்பந்தமாக
I. வியாபாரம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களுக்கு ஆக குறைந்தது = 1500=
II. நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு ஆக குறைந்தது = 3000/=
III. அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கு ஆகக் குறைந்தது = 5000/=
இறுதியாகயாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் ஒழுங்கு விதிமுறைகளையும் ஏற்படும் சிக்கல்களை பிரச்சனைகளை தீர்க்கும் முறைகளையும் மற்றும் அமைப்பால் இறுதித் தீர்மானம் எடுப்பது சம்பந்தமாகவும் அழகாக தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு முழுமையாக யாப்பு வாசிக்கப்பட்டது இந்த யாப்பை உத்தியோகபூர்வமாக அமைப்பின் யாப்பாக ஏகமனதாக வந்தவர்களில் அனைவரையும் ஏற்றுக் கொண்டார்கள்.
15 பேரும் இந்த யாப்பில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என்றும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளதாக அனைவராலும் ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டு யாப்பு இவ்வைப்பின் அருதி இருதியுமான யாப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த நிர்வாகத்தில் புதிய இளைஞர்களை இணைத்து நிர்வாகத்தில் உள்வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் நிர்வாகத்தில் சிறியதொரு மாற்றம் செய்யப்பட்டது
இறுதியாக இதற்கான தெரிவவு இடம்பெற்று நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது அதில்
1. அமைப்பாளர் (manager): M. A. M. Mufaris - அனைவராலும் ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டது.
2. உப தலைவர் : J. M. Sahmy – முன்மொழிந்தவர் :A.R.M.Naseem - வழிமொழிந்தவர்: Y M.Muneer
3. செயலாளர் : Y.M.Muneer -முன்மொழிந்தவர் : M.L.Akeel - வழிமொழிந்தவர்: M.A.M.Mufaris
4. உப செயலாளர் : F.G.Mujeeb - முன்மொழிந்தவர் :J.M.Ashker - வழிமொழிந்தவர்: K.M.Asmith
5. பொருளாளர் : A.Habeeb - முன்மொழிந்தவர் : M.M.Sajeetg - வழிமொழிந்தவர்: T.M.Nafraan
6.
உறுப்பினர்கள்
7. A. R. M. Naseem
8. K. M. Asmith
9. A. Ahsan
10. J. M. Ashker
11. M. M. Sajeeth
12. T. M. Nafraan
13. M. L. Akeel
14. A. M. Ilhaam
15. Y. Rifky
16. M. R. M. Basery