Persatuan penganut aathi kulatheivam

Persatuan penganut aathi kulatheivam Traditional way of life and worship

31/07/2023
30/05/2023

தெய்வம் தந்த கோயில் "வீடு"

யார் ஒருவர் தெய்வத்தை கோயில்களில் தேடாமல் வீட்டில் தேடுகிறாரோ அவர்கள் இல்லமும், உல்லமும் எப்பவும் நிறைந்தே இருக்கும்.

30/05/2023

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை - என்பது முன்னோர் வாக்கு

பொருள் என்பது நீங்கள் சம்பாதித்த சொத்துக்கள் அல்ல" அந்த பொருள் என்பது உங்கள் தெய்வம், அந்த பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகத்தில் வாழ பாதுகாப்பே இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும் வரை இதை யாருக்கும் பகிரவேண்டாம்.

30/05/2023

#ஊழ்வினை என்பதை விதி அல்லது கர்மா என்கிறோம்.

நம்மால் தடுக்கமுடியாத சில அசம்பாவிதங்கள், கெடுதல்கள் நம் வாழ்வியலை உருக்குலைய செய்யும் இதையே இளங்கோ அடிகள்" ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் திருக்குறளில் "ஊழ்வினை" என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்".

இதன் பொருள் என்னவென்றால், ஊழ்வினையிலிருந்து தப்ப நாம் மாற்று வழியில் சென்றாலும் அது எப்படியாவது நம் முன்னேவந்து நிற்கும் என்பதாகும்.

வினைகள் மூன்றுவகை அவை ஊழ்வினைகள் என கூறப்பட்டுள்ளன:-

1) நுகர்வினை எனப்படும் (பிராரப்த) கர்மா. முற்பிறவிகளில் மற்றும் இப்பிறவியில் நாம் செய்த பாவங்களின் மூட்டை இது. இப்பாவங்களில் இருந்து நாம் தப்பமுடியாது. அதிக லாபம் அடைய கலப்படம் செய்வது, அடுத்தவர் பொருட்களை அபகரிப்பது, அதன் பலனே இப்போது அனுபவிக்கும் நுகர்வினை !

2) தொல்வினை எனப்படும் (சஞ்சித) கர்மா. முன்னோர்கள் செய்த சில பாவங்கள் இனி வரப்போகும் பிறவியிலும் நமக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இப்பிறவியில் குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலம் இதை மாற்றலாம். " இவை மரபணு வினை எனப்படும்.

3) செய்வினை எனப்படும் (ஆகாமய) கர்மா. இது முழுவதும் மனிதன் கையிலேயே உள்ளது. நாம் இப்பிறவியில் நல்ல செயல்களைச் செய்தால், இப்பிறவியிலேயே நமக்கு நன்மைகள் கிட்டும். குரு வழியில் தியானம் செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி எதிர் வினைகளை அறுத்து. மனசாட்சியோடு நடந்துகொண்டால், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பது ஓர் உதாரணமாகும்.

விதியை நொந்து நாம் சும்மா இருக்கக்கூடாது. நம் கடமைகளை நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும். இதை மனதில் வைத்துத்தான் கடமையைச் செய் ! பலனை எதிர்பார்க்காதே ! " என்று கூறினார்

30/05/2023

நம்ம ஊர் காக்கும்,நம்ம குலம் காக்கும்,நம்ம குடும்பம் காக்கும் குல தெய்வ அம்மனையும், அய்யனாரையும், கருப்பசாமி, சுடலை மாட சுவாமி, சங்கிலி பூத்த்தார்களை மறந்து விட்டு அவர்களுக்கு உண்டான பலி பூஜைகளையும் உதாசீனம் செய்து விட்டு ஏசு,சாய்பு பாபா, புத்தன், ராகவேந்திரா, ராமானுஜா,மகா பெரியவா,அந்த வழி,இந்த வழி என நிம்மதியை இழந்து சுயத்தையும் இழந்து திரிபவர்களே...

குலதெய்வ வழிபாடு என்பது தலைமுறை தலைமுறையாக செய்து வந்த சங்கிலி தொடர்பு

குல தெய்வத்திற்கு பலி தேவை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

பகிர்வோம்.

Om muniswaraya nama
09/03/2023

Om muniswaraya nama

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலார்...அண்ணல் இருப்பிடம் ஆராய்ந்து கொள்வார்க்கு...அண்ணல் அழிவுஇன்றி உள்ளே அமர்ந்திடும்...அண...
01/12/2022

அண்ணல் இருப்பிடம்
ஆரும் அறிகிலார்...
அண்ணல் இருப்பிடம்
ஆராய்ந்து கொள்வார்க்கு...
அண்ணல் அழிவுஇன்றி
உள்ளே அமர்ந்திடும்...
அண்ணலைக் காணில்
அவன் இவன் ஆகுமே..!

சிவம் வீற்றிருக்கும் இடத்தை எவரும் அறியமாட்டார். சீவனாய் ஒளிமயமாய் வீற்றிருக்கும் இடத்தை அறிபவர்க்கு சிவம் அவர் உள்ளத்தை விட்டு அகலாது. அவ்வாறு சீவனை காணில் அவர் சிவமே ஆவார்.

தீரா கடன்தீரா பகைதீராத நோய்தீரா பிரச்சனைகள் நிவர்த்தி அடைய உங்கள் குல தெய்வத்தை வேண்டி பலி கொடுத்து படையல் செய்து விட்டு...
26/11/2022

தீரா கடன்
தீரா பகை
தீராத நோய்
தீரா பிரச்சனைகள்
நிவர்த்தி அடைய உங்கள் குல தெய்வத்தை வேண்டி பலி கொடுத்து படையல் செய்து விட்டு நிம்மதி உடன் வாழுங்கள்.

Address

67 Jalan Dato DaGang 6, Taman Sentosa
Klang
41200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+60166160361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persatuan penganut aathi kulatheivam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Persatuan penganut aathi kulatheivam:

Share

Category