Veera abimanyu

Veera abimanyu Veera abimanyu

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - ஆலோசனைக் கூட்டம்14.02.2026 சனிக்கிழமை, காலை: 10.00 மணிமகராஜா திருமண மண்டபம், சோழகங்கநல்லூர்,...
12/02/2026

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - ஆலோசனைக் கூட்டம்

14.02.2026 சனிக்கிழமை,
காலை: 10.00 மணி
மகராஜா திருமண மண்டபம்,
சோழகங்கநல்லூர், சென்னை 600119

சிறப்புரை
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கைஒரே ஆண்டில் ரூ.26,867 கோடி அரசு மானியம் அளித்தும் ரூ.16,048 கோடி இழப்பு: ப...
09/02/2026

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கை
ஒரே ஆண்டில் ரூ.26,867 கோடி அரசு மானியம் அளித்தும் ரூ.16,048 கோடி இழப்பு: பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுகவின் சாதனை!

இந்தியாவில், 2022-&23ஆம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என்றும் பதினாறாம் நிதி ஆணையத்தின் முதன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. மது வணிகம் செய்யும் டாஸ்மாக், உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறித்து 1000%க்கும் மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிப்காட் போன்ற நிறுவனங்கள் தான் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த 54 நிறுவனங்களும் சேர்ந்து 2022-&23ஆம் ஆண்டில் ஈட்டிய இலாபம் வெறும் ரூ.2560 கோடி மட்டும் தான்.

அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். அந்த ஆண்டில் மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழுமையான தகவல்கள் நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அந்தத் தொகையும் சேர்ந்திருந்தால், ரூ.18,814 கோடி இழப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இராஜஸ்தான் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கும்.

2022-&23ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.26,867 கோடி வழங்கியது. அந்த மானியம் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.52,915 கோடியாக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பில் ரூ.32,430 கோடியுடன் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை தமிழகம் பிடித்திருக்கும்.

இழப்பை எதிர்கொண்ட நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது மின்சார வாரியம் ஆகும். 2022&-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.9192 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-&22ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.9000 கோடி ஆகும். 2022-&23ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி 2022-&23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த நிறுவனம் சீரழிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் திமுக ஆட்சியாளர்களின் ஊழல் தான்.

இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு மாநிலம் அதன் அனைத்துத் தேவைகளுக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், வரி அல்லாத வருவாயை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

மாநிலங்களின் வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான ஒரே வழி பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குவதும், கனிமவளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தான். ஆனால், இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆற்று மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாலும், அதில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களின் பைகளுக்கு செல்கின்றன. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழக அரசின் வரி அல்லாத மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

2025&26ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.4 லட்சத்து, 30,434 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் நடப்பாண்டில் வெறும் ரூ.28,818.58 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 6.69% மட்டும் தான். ஒரு மாநிலத்தின் நிதிநிலை வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதன் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 20% அளவுக்கு வரி அல்லாத வருவாய் இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி.

நாளை (09-02-2026) மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்கிறேன்.!நாள்: 09-02-2026நேரம் ...
09/02/2026

நாளை (09-02-2026) மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்கிறேன்.!

நாள்: 09-02-2026
நேரம் : மாலை 4 மணி
இடம் : சதுரங்காடி (SQUARE MARKET), மேட்டூர்.

#மகளிர்உரிமைமீட்புப்பயணம்
#சிங்கப்பெண்ணேஎழுந்துவா

பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம்..!வருகிற 10.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று பாமக தலைவர் அண்ணன் ...
09/02/2026

பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம்..!

வருகிற 10.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று பாமக தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..!

நாள் : 10.02.2026
இடம் : சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.

https://maps.app.goo.gl/mi6d5vCxfPGY4chq8பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம்..!

Tomorrow - I will participate in the opening ceremony of buildings set up under PMK President Dr. Anbumani Ramadas's Par...
09/02/2026

Tomorrow - I will participate in the opening ceremony of buildings set up under PMK President Dr. Anbumani Ramadas's Parliamentary Constituency Development Project Fund in Cuddalore, Villupuram, Chengalpattu districts!

  || பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுகவின் சாதனை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்ஒரே ஆண்டில் ரூ.26,867 கோடி அரசு மானி...
09/02/2026

|| பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுகவின் சாதனை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ஒரே ஆண்டில் ரூ.26,867 கோடி அரசு மானியம் அளித்தும் ரூ.16,048 கோடி இழப்பு

மின்வாரியம் மட்டும் ரூ. 9,192 கோடி இழப்பை சந்தித்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Dr. Soumya Anbumani who has taken a place in the hearts of the people of Dharmapuri district.!
07/02/2026

Dr. Soumya Anbumani who has taken a place in the hearts of the people of Dharmapuri district.!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கைஅடக்குமுறை கூடாது: ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவு பணியாளர்களின் 13 அ...
07/02/2026

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கை

அடக்குமுறை கூடாது: ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!

ஓய்வூதியம் உயர்வு, பணிக்கொடை அதிகரிப்பு, முழு நேர அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஐந்தாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அவர்களை கைது செய்து ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

பகுதி நேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு முறையே ரூ.7,700, ரூ.4100, ரூ.3000 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரை முழுநேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; மாதம் ரூ.2000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படும் நிலையில் அதை ரூ.6750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் பணியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜனவரி 20&ஆம் தேதி மாநிலம் முழுவதும் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று திமுக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 24&ஆம் தேதி, ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 3,400 ஆகவும், பணிக்கொடை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். தங்களின் கோரிக்கை மற்றும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை விட குறைந்த ஓய்வூதியமும், பணிக்கொடையும் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 13 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 3&ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் அரசு இன்று வரை பேச்சு நடத்தவில்லை. மாறாக போராடும் பணியாளர்களை கைது செய்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

செங்கல்பட்டு பகுதியில் போராட்டம் நடத்தி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நேற்று நான் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் கூறிய பல தகவல்கள் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தன. 30 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு பணியாளர்களுக்குக் கூட இன்னும் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர். விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், ரூ.7,700 அடிப்படை ஊதியத்தை வைத்துக் கொண்டு ஒருவரால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3400 ஓய்வூதிடம் எந்த வகையில் போதுமானது? என்ற அவர்களின் நியாயமான வினாக்களை திமுக அரசு மனித நேயத்துடன் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இன்னொருபுறம் சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 43,038 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் ஐந்தாம் நாளாக முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும், குறிப்பாக சத்துணவுத் திட்டப் பயனாளிகளாக சேர்ந்திருக்கும் குழந்தைகள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சத்துணவுத் திட்டத்தை நம்பியுள்ள அவர்களுக்கு உணவு கிடைக்காதது அவர்களின் கல்வியையும், உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும்.

எனவே, உரிமை கேட்டுப் போராடும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை கைவிட்டு, அவர்களுடன் அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

  | அரசே பழிவாங்கலாமா?ஊராட்சி செயலர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ...
07/02/2026

| அரசே பழிவாங்கலாமா?

ஊராட்சி செயலர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

நீதி கேட்டுப் போராடும் ஊராட்சி செயலாளர்களை பணியில் இருந்து நீக்கி பழிவாங்குவதாக கூறி தமிழக அரசுக்கு கண்டனம்

#நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கைமடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: கொடூரக் காவலர்களை ஏவியவர்களை சிபிஐ தயக...
06/02/2026

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கை
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: கொடூரக் காவலர்களை ஏவியவர்களை சிபிஐ தயக்கமின்றி கைது செய்ய வேண்டும்!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் மீதான நகைத்திருட்டு புகார் பொய்யானது என்றும், எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி அஜித் குமாரை காவல்துறை உயரதிகாரி ஆணைப்படி காவலர்கள் அடித்துக் கொலை செய்திருப்பதாகவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ கூறியிருக்கும் நிலையில், தமது மகன் மீது பொய்ப்புகார் அளித்தவர்களும், அவரது படுகொலைக்கு காரணமானவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்று அஜித் குமார் தாயார் வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கை மிகவும் நியாயமானது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மீது அந்தக் கோயிலுக்கு வந்த நிதிதா என்பவர் கொடுத்த நகைத்திருட்டு புகாரின் அடிப்படையில், அஜித்குமாரை கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி கைது செய்த தனிப்படைக் காவலர்கள் 5 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்த கொடூரத்தை தமிழகம் இன்னும் மறந்து விடவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் அஜித்குமார் அப்பாவி என்பதும், நிதிதாவுக்காக உயர் அதிகாரத்தில் உள்ள சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் தெளிவாகியுள்ளது.

அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதாவுக்கு ஆதரவாக பெண் இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த காவல்துறை உயரதிகாரி மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்திற்கு பிறப்பித்தக் கட்டளைகளின் அடிப்படையில் தான் அஜித் குமார் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்றும் அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அஜித்குமார் அப்பாவி என்பது உறுதியாகி விட்ட நிலையில், அவர் மீது பொய்யான புகார் கொடுத்த நிகிதா கைது செய்யப்படுவதும், அவருக்காக காவலர்களை ஏவிய உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதும் தான் நீதியாகும்.

அஜித் குமார் கொலையை பொறுத்தவரை அவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் வெறும் அம்புகள் தான். அம்புகளை மட்டும் தண்டித்து விட்டு, அவர்களை ஏவியவர்களை தப்ப விடுவது நியாயமாக இருக்காது. எனவே, அஜித் குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள நிகிதா மற்றும் அதிகாரம் மிக்க உயர்பதவிகளில் இருப்பவர்களையும் சிபிஐ தயக்கமின்றி கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்துடன், கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கைவிடுதிகளில் பட்டியலின மாணவிகளுக்கு சோறு, ஊறுகாய் மட்டுமே வழங்கப்படும் அவலம...
06/02/2026

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கை
விடுதிகளில் பட்டியலின மாணவிகளுக்கு சோறு, ஊறுகாய் மட்டுமே வழங்கப்படும் அவலம்: நாற்றமடிக்கும் திமுகவின் சமூகநீதி!

புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் வெறும் சோறும், ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், தங்களுக்கு குறைந்தபட்சம் உண்ணத் தகுந்த உணவு வழங்க வேண்டும் என்று கோரி அந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருவதாகவும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பட்டியலின மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்கு கூட துப்பில்லாத நிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை சமூகநீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த திசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த இரு மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச் சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. காய்கறிகள் வாங்கி பருப்பு குழம்பு வைத்து மாணவ, மாணவியருக்கு பரிமாறுவதற்கு கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் தான் பட்டியலின மாணவிகளுக்கு வெறும் சோறு மட்டுமே வழங்கப்படும் அவலம் நிலவுகிறது.

புதுக்கோட்டை சமூகநீதி விடுதியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஒரு மாதத்திற்கு உணவு வழங்குவதற்காக ரூ.1500, அதாவது தினமும் ரூ.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகாரத்தில் இருப்பவர்களால் சுரண்டப்படுகிறது. இந்தத் தொகை சுமாரான உணவு வழங்குவதற்கே போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், அது கூட வழங்கப்படாவிட்டால் பட்டியலின மாணவ, மாணவியருக்கு எவ்வாறு உணவு வழங்க முடியும்? என்பதை விடியா அரசு தான் விளக்க வேண்டும்.

பட்டியலின மாணவ, மாணவியர் விடுதிக்கு நிதி ஒதுக்காத கொடுமை இப்போது தான் நடைபெறும் ஒன்றல்ல. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களின் நலனில் சிறிதும் அக்கறைக்காட்டவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு 4 மாதங்களுக்கும் மேலாக உணவுப்படி வழங்கப்படவில்லை. அதனால், அதன் வார்டனாக பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் மகேந்திரன் என்பவர் சொந்தக் காசை செலவழித்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வந்தார். நிலுவையில் உள்ள உணவுப்படியை வழங்கும்படி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் பணம் ஒதுக்கீடு செய்யாததாலும், தம்மை மீண்டும் ஆசிரியர் பணிக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் கடந்த திசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றும் பலரும் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து விட்டு, அது மீண்டும் கிடைக்குமா? என்ற மன உளைச்சலில் தான் உள்ளனர்.

திமுக ஆட்சியில் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக விடுதிகளின் பெயரை சமூகநீதி விடுதிகள் என்று பெயர்மாற்றம் செய்யும் வேலை மட்டும் தான் நடந்தது. ‘பேரு வச்சியே சோறு வச்சியா’ என்ற திரைப்பட அவல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாகத் தான் திமுக ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சமூகநீதி நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. வளர்ச்சியில் யாரையும் பின் தங்க விட மாட்டோம் என்று வசனமெல்லாம் பேசும் முதலமைச்சரின் ஆட்சியில், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் சகிக்க முடியாதவையாக உள்ளன. "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்பதைப் போலத் தான் திமுக ஆட்சியும் உள்ளது. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.

Address

Mela Street, M. Uttamasozhagan
Davao City
608305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veera abimanyu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category